நீரோடைகளில் தண்ணீர் திருட்டு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீரோடைகளில் தண்ணீர் திருட்டு

Added : ஜூன் 26, 2019
Share

-தேனி : தேவதானப்பட்டி வன பகுதியில் கல்லாறு, கும்பக்கரை, செலும்பு, அடுக்கம் உள்ளிட்ட அடர் வனங்கள் உள்ளன. இங்கு பல கி.மீ., துாரம் நீரோடைகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் நீண்ட துாரம் குழாய்கள் மூலம் தனியார் தோட்டங்கள், நிறுவனங்களுக்கு தண்ணீர் திருடப்படுகிறது. ஆனால் வனத்துறை மூலம் வனவிலங்குகள் தாகம் தீர்க்க கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள் தண்ணீரின்றி சருகுகள் நிறைந்து உள்ளன.இங்கு காட்டுமாடு, மான், பன்றி, சிறுத்தை, காட்டுப்பூனை, காட்டுக்கோழி, பறவைகள் என அனைத்து வன உயிர்களும் உள்ளன. விலங்குகள் தாகம் தீர்க்க தண்ணீரின்றி, விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்கின்றன.

அவற்றுக்காக அடுக்கம் சோதனைச் சாவடி அருகில் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி பயனற்றுள்ளது. . வருஷநாடு சரகம், மேகமலை வன உயிரினக் கோட்டத்திலும் இதுபோல தண்ணீர் இன்றி தொட்டிகள் உள்ளன.தேவதானப்பட்டி வன அலுவலர் சுரேஷ்குமார் கூறுகையில், சரகத்தில் கும்பக்கரை அருவிக்கு மேல் பகுதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், தொட்டிகளுக்கு தேவையில்லை.மனித பயன்பாட்டில் கொண்டுவந்து தொட்டியில் சேகரிக்கும் தண்ணீரை விலங்குகள் மனித வாசனை இருப்பதால் குடிப்பது இல்லை. ரோந்து செல்லும் போது நீரோடைகளில் இருந்து திருடப்படும் குழாய்களை துண்டித்து, உரிமையாளர்களை எச்சரித்துள்ளோம். தண்ணீர் திருட்டு இல்லை. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும், ''என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X