பொது செய்தி

தமிழ்நாடு

அனல் மின் நிலையங்களில் மரக்கன்றுகள் நட உத்தரவு

Added : ஜூன் 26, 2019
Advertisement

சென்னை, அனல் மின் நிலையங்களில், அதிகளவில் மரக்கன்றுகள் நட, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு; சேலம், மேட்டூர்; துாத்துக்குடியில், மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவை, பல நுாறு ஏக்கரில் அமைந்துள்ளன.மேற்கண்ட மின் நிலையங்களில், மின் உற்பத்திக்கு, எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறப்படுகிறது. தற்போது, தண்ணீர் தட்டுப்பாட்டால், மக்கள் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அனல் மின் நிலையங்களில் உள்ள காலி இடங்களில், அதிகளவில் மரக்கன்றுகளை நடும்படி, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.மேலும், அந்த மரக்கன்றுகளை, முறையாக தண்ணீர் ஊற்றி, பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X