பொது செய்தி

தமிழ்நாடு

புயலில் அதிகளவில் சேதம் கம்பத்துக்கு, 'குட்பை'

Added : ஜூன் 26, 2019
Advertisement



ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை பின்பற்றி, தமிழகத்திலும், 7.50 மீட்டர் உயரம் உடைய, மின் கம்பங்களின் பயன்பாட்டை, மின் வாரியம் நிறுத்தியுள்ளது.சென்னையில், சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள்; மற்ற இடங்களில், மின் கம்பங்கள் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது. மின் வாரியத்திற்கு, மாதம், 45 ஆயிரம் கம்பங்கள் தயாரிக்கும் திறனில், 24 உற்பத்தி கூடங்கள் உள்ளன. அங்கு, ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, கம்பங்கள் தயாரிக்கப்படுகின்றன.தற்போது, 7.50 மீட்டர்; 8 மீட்டர்; 9 மீட்டர் உயரங்களில், கம்பங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில், 7.50, 8 மீட்டர் கம்பங்களில், வீடு உள்ளிட்ட தாழ்வழுத்த இணைப்புகளுக்கு, மின் வினியோகம் செய்யப்படுகிறது.குறைந்த திறன் துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் வழித்தடங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், 9 மீட்டர் கம்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கம்பத்தின் அதிகபட்ச விலை, 4,500 ரூபாய்.கன மழை, புயலின்போது, கம்பங்கள் சேதமடைவது, தொடர் கதையாகிறது. இந்நிலையில், 7.50 மீட்டர் உயரம் உடைய, கம்பங்களின் பயன்பாட்டை, மின் வாரியம் நிறுத்தியுள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:அதிக காற்று வீசக் கூடிய பகுதிகளில், 8 மீட்டர் உயரத்தில், 200 கிலோ எடை உடைய கம்பங்களை பொருத்தினால் போதும். மின் வாரியம், 7.50 மீட்டரில், 140 கிலோ; 8 மீட்டர் உயரத்தில், 140 - 200 கிலோ; 9 மீட்டரில், 400 கிலோ எடை உடைய கம்பங்களை பயன்படுத்தி வருகிறது.நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வீசிய, 'கஜா' புயல், திண்டுக்கல் போன்ற உள் மாவட்டங்களையும் பாதித்தது. இதனால், அங்கிருந்த கம்பங்களும் சாய்ந்தன.ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள், துவக்க நிலையிலேயே, 8 மீட்டரில், 200 கிலோ எடையுள்ள கம்பங்களை தான் பயன்படுத்துகின்றன. அதை, தமிழகத்திலும் பின்பற்றி, 7.50 மீட்டர் கம்பங்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X