பழைய ஓய்வூதியம் அமல் பொறியாளர்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழைய ஓய்வூதியம் அமல் பொறியாளர்கள் கோரிக்கை

Added : ஜூன் 26, 2019
Share

சென்னை, 'தமிழக அரசு, 2004க்கு பின், பணியில் சேர்ந்த அனைவருக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, இந்திய பொறியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, இந்தியர் அலுவலர் சங்கத்தில், இம்மாதம், 23ம் தேதி, இந்திய பொறியாளர் கூட்டமைப்பின், தென் மண்டல கூட்டம் நடந்தது. அதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின், பொறியாளர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.தென் மண்டல தலைவர், என்.வெங்கடேஸ்வரலு தலைமையில் நடந்த கூட்டத்தில், இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் தலைவர், சி.தேவநாத், துணை தலைவர், எஸ்.ஆனந்த், தென் மண்டல பொதுச்செயலர், கே.அன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஓய்வுபெறும் பொறியாளர்களுக்கு பணி நீட்டிப்பு மற்றும் மறு நியமனம் அளிக்க கூடாது என்று, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது உள்ளிட்ட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X