பொது செய்தி

தமிழ்நாடு

'கொடையில்' ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்

Added : ஜூன் 26, 2019
Share
Advertisement

கொடைக்கானல் : கொடைக்கானலில் ரோட்டோரமுள்ள ஆக்கிரமிப்புகளை இயந்திரம் மூலம் அகற்றும் பணி துவங்கியது. கொடைக்கானலில் சீசன் மற்றும் இதர நாட்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தருவது வழக்கம்.

போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் பயணிகள் அவதிப்படுவர். இதற்கு தீர்வு காண கோரிக்கைவிடுத்தும் நடவடிக்கை இல்லை.வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் நகரின் பிரதான ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளே இதற்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை கடந்த வாரம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியது. இதன்பின்பும் அகற்றப்படாத கடைகள், நேற்று மூஞ்சிக்கல்-அரசு மேல்நிலைப்பள்ளி பகுதி வரை அகற்றப்பட்டது.

இதில் நகராட்சி பஸ் ஸ்டாப் பகுதியும் அடங்கும்.தொடர்ந்து மூன்று நாட்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ., சுரேந்திரன், உதவிக் கோட்டப் பொறியாளார் விஜயகுமார், உதவிப்பொறியாளார் செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X