மின்துறை அதிகாரிகளுக்கு பொதுக்கணக்கு குழு எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மின்துறை அதிகாரிகளுக்கு பொதுக்கணக்கு குழு எச்சரிக்கை

Added : ஜூன் 26, 2019
 மின்துறை அதிகாரிகளுக்கு பொதுக்கணக்கு குழு எச்சரிக்கை

புதுச்சேரி:ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக சரியான பதில் தர வேண்டும் என, மின்துறை அதிகாரிகளுக்கு, பொதுக்கணக்கு குழு எச்சரித்துள்ளது.
புதுச்சேரி அரசின் மின்துறை சார்பில் மின்சாரத்தை கணக்கிட 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து வாங்கிய இந்த மீட்டர் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக, சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னையை எழுப்ப, இது தொடர்பாக பொதுக்கணக்கு குழு விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் சட்டசபை வளாகத்தில் நடந்தது. குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் அன்பழகன், அனந்தராமன், அசனா, தீப்பாய்ந்தான், விஜயவேணி, பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் தொடர்பாக, மின் துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எந்த பதிலும் இல்லை. அடுத்த கூட்டத்தில் அதற்கான பதில் தர வேண்டும் இல்லையெனில் இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்வோம் என, உறுப்பினர்கள் எச்சரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X