பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோர் கருத்தரங்கு

Added : ஜூன் 26, 2019
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான (டிக்கி) விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.தலித் இண்டியன் சேம்பர் ஆப் காமர்ஸ் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் வரவேற்றார். கனரா வங்கி மேலாளர் மாரிமுத்து பேசுகையில், 'வங்கி கடன் பெற்ற தொழில்முனைவோர் கடனை தவணை முறையில் திரும்ப செலுத்தி வங்கிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

தகுதியான தொழில் முனைவோரை தேர்வு செய்து தொழில் கடன் வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின சென்னை மைய மூத்த மேலாளர் கலையரசன் பேசுகையில், 'தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களை மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் 4 சதவீதம் கொள்முதல் செய்கின்றன. பொருட்காட்சியில் அங்காடி அமைக்க இலவச அனுமதி பெற்று சந்தை வாய்ப்பை ஏற்படுத்துகிறது,என்றார்.மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் ஜெயா, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பாலச்சந்திரன் கலந்து கொண்டனர். 'டிக்கி' மைய நிர்வாகி ஜோசப் மார்டின் நன்றி கூறினார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X