பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க என்ன செய்யலாம்?

Added : ஜூன் 26, 2019
Advertisement
 குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க என்ன செய்யலாம்?

தமிழகத்தில், குறிப்பாக, சென்னையில் நிலவி வரும், கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கீழ்க்கண்ட எளிய கருத்துரைகள் தரப்படுகின்றன.சென்னை மாநகரம்சென்னையை சுற்றியுள்ள நீர்த்தேக்கங்களான, பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம், சென்னை நகருக்கு, 12 டி.எம்.சி., குடிநீர் அளித்து வருகின்றன. சென்ற ஆண்டு, போதுமான மழை பெய்யாததால், இன்று அவை, தண்ணீரின்றி வறண்டு உள்ளன.இருப்பினும், இந்த நீர்த்தேக்கங்களின் நிலத்தடி நீர் மட்டம், 5 முதல், 10 மீட்டருக்கு உள்ளேயே இருக்கும். இந்த ஏரிகளுக்குள், 100 மீட்டர் x 100 மீட்டர் இடைவெளியில், நுாற்றுக்கணக்கான ஆழ்துளை குழாய் கிணறுகளை அமைத்து, அவற்றிலிருந்து நீரை எடுத்து, சென்னைக்கு குடிநீராக வழங்கலாம்.குறைந்தது, நாள்தோறும், 20 கோடி லிட்டர் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. செலவு, 50 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும். ரயிலில் தண்ணீர் கொண்டு வருவதை விட குறைவே.பிற மாவட்டங்கள்தமிழகத்தின் பிற மாவட்டங்களில், 20 ஆயிரம் ஏரிகள் மற்றும் கண்மாய்கள் உள்ளதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அவையும் இன்று வறண்டு உள்ளன. உடனே, 100 ஜே.சி.பி.,க்களை குத்தகைக்கு எடுத்து, இந்த ஏரி, கண்மாய்களில் உள்ள, வேலிக்கருவை மரங்களை, இரண்டு மாதங்களுக்குள் முற்றிலுமாக அகற்ற வேண்டும்.இந்த ஏரிகளின் படுகைகளில், 1 மீட்டர் ஆழத்திற்கு, மண்ணை வெட்டி எடுக்க வேண்டும். மழை பெய்யும் போது, தண்ணீர் இந்த ஏரிகளில் தேங்கி, நிலத்தடி நீர் மட்டத்தை பெரிதும் உயர்த்தும், கால்நடைகளுக்கும் குடிநீராகப் பயன்படும்.இந்த ஏரிகளிலும், தேவையான அளவுக்கு ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைத்து, தண்ணீர் பெறலாம். மொத்தச் செலவு, 100 கோடி ரூபாய்க்குள் இருக்கும். இவை அனைத்தையும், ஒரே சமயத்தில், மூன்று மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்.இதன்மூலம், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும், வட கிழக்கு பருவ மழையை, எளிதாகச் சேமிக்கலாம். இந்த இரண்டு திட்டங்களும், போர்க்கால அடிப்படையில், அரசியல்வாதிகளின் குறுக்கீடின்றி, விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆங்காங்கே, தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.குறிப்பு:1நுாறு நாள் வேலை திட்டத்தில், 1,829 வேலைகளை - 9.50 கோடி ரூபாயில், குடிமராமத்து திட்டத்தை நிறுத்தி வைத்து, அந்த நிதித் தொகையை, மேற்குறிப்பிட்ட உடனடி பணிகளுக்கு திருப்பலாம்.2மழைநீர் சேகரிப்பு பணிகளை விரைந்து முடுக்கி விட வேண்டும். வெறுமனே பரப்புரை செய்வதற்குப் பதிலாக, அரசு இதற்கு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். இதற்கென அரசு, பல ஆண்டுகளாகவே எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என்பது, வேதனை தரும் விஷயம்.3இப்பணிகளை நிறைவேற்றும் பொறுப்பை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் விடுவதை தவிர்த்து, துறை சார்ந்த தலைமைகளிடம் தரலாம். துறைசார் வல்லுனருக்கு உரிய அதிகாரங்கள் தரப்பட்டு, அரசியல்வாதிகளின் தலையீடு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.நன்றி: 'விடுதலை' நாளிதழ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X