பொது செய்தி

இந்தியா

மிசா கருப்பு தினம் பா.ஜ., அனுசரிப்பு

Added : ஜூன் 26, 2019
Advertisement
 மிசா கருப்பு தினம்  பா.ஜ., அனுசரிப்பு

புதுச்சேரி:புதுச்சேரி பா.ஜ., அலுவலகத்தில் 'மிசா கொடுமைகள்' என்ற தலைப்பில் கருப்பு தின கருத்தரங்கம் நேற்று நடந்தது.
காங்., ஆட்சி காலத்தில் இந்திரா காந்தி பிரதமாராக இருந்த போது, 'மிசா' என்ற அவசர நிலை அமுல்படுத்தப்பட்டது. அன்றைய தினத்தை, பா.ஜ., கருப்பு தினமாக அனுசரித்து வருகிறது. அதன்படி, பா.ஜ., சார்பில் நேற்று நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டு, 'மிசா கொடுமைகள்' என்ற தலைப்பில் கருப்பு தின கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பா.ஜ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வம் வரவேற்றார். மாநில பொதுச் செயலர்கள் விக்ரமன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக விஜயபாரதம் ஆசிரியர் நெல்லை வீரபாகு, காங்., ஆட்சி காலத்தில் 'மிசா' சட்டத்தின் மூலமாக தேசிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், காங்., கட்சியின் இருண்ட வரலாற்று பக்கங்கள் குறித்து பேசினார்.நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநில துணை தலைவர் செல்வம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X