திருப்பூர்:மகளிர் சுய உதவிக்குழுவினரே ரேஷன் கடையை தொடர்ந்து நடத்த வேண்டுமென, பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.திருப்பூர், போயம்பாளையம், கங்காநகர் பொதுமக்கள், நேற்று கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், மாநகராட்சி, 30வது வார்டு, கங்காநகரில், கஸ்துாரிபாய் மகளிர் சுய உதவிக்குழுவினரால், 15 ஆண்டுகளாக, ரேஷன் கடை நடத்தப்பட்டு வருகிறது.ஆனால், ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர், ரேஷன் கடை சரிவர நடத்தப்படுவதில்லை என, மக்களை திசை திருப்பி வருகின்றனர். முறையாக விசாரித்து கஸ்துாரிபாய் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலமே ரேஷன் கடையை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.