பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி அமைச்சர்கள் அலுவலக செலவு விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

Added : ஜூன் 26, 2019
Advertisement

புதுச்சேரி:அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு, அரசு சார்பு நிறுவனங்களின் நிதியை செலவு செய்த விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு, கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அமைச்சர்கள் அலுவலக செலவுகளுக்கு, அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறைகளின் பணம் முறைகேடாக செலவு செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது.இதுதொடர்பாக, ராஜிவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியதில், வருவாய்த்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு, 'பிப்டிக்' நிறுவன பணத்தில் இருந்து எழுது பொருட்கள், நாற்காலி, எலக்ட்ரானிக் ஸ்டவ், ஏணி, வேக்கம் கிளீனர் உள்ளிட்ட பொருட்களை ரூ.3 லட்சத்து 16 ஆயிரத்து 151க்கு வாங்கியிருப்பதும், சமூக நலத்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதம் டீ வாங்க பாட்கோ நிதியில் இருந்து 15 ஆயிரத்து 980 ரூபாய் செலவு செய்திருப்பதும் தெரிய வந்தது. பிற அமைச்சர் அலுவலகங்கள் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.அதையடுத்து, புதுச்சேரி அமைச்சர்கள் அலுவலகங்களில் விதிமுறைளை மீறி அரசுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் நிதி செலவு செய்யப்படுவதாக மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, தலைமை செயலர் ஆகியோருக்கு, ஆதரத்துடன் மனு அனுப்பியிருந்தார்.அந்த மனுவில், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் வழக்கமாக இந்த செலவினங்கள் அமைச்சரவை செயலகங்கள்தான் மேற்கொள்கின்றன. இந்நிலையில் ஏன் அரசு சார்பு நிறுவனங்களிடம் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.அதே சமயம் பல அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.எனவே, அமைச்சரவை அலுவலகங்களுக்கு, அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறைகள் செலவு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டிருந்தார்.இந்நிலையில், நேற்று காலை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தகவலிலில், ''யார் சட்ட விதிகளை மீறினாலும் அதற்கான பதிலை கூற அவர்கள் கடமைப்பட்டவர்கள்.அமைச்சர்கள் அலுவலக செலவு விவகாரம் தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை மீறி உதவி புரிந்தவர்களும் இதற்கு பதில் அளிக்க வேண்டும்'' என, தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் கவர்னர் அதிகாரம் தொடர்பாக பிரச்னை பரபரப்பு முடிவதற்குள், தற்போது, அமைச்சரவை செலவு விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ள விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X