பொது செய்தி

தமிழ்நாடு

யாகம் முடிந்தது வேகம் பிறக்குமா?

Added : ஜூன் 26, 2019
Advertisement


'யாகத்தை அடுத்து, நீர்நிலைகளை துார்வாரும் பணியில், அமைச்சர்கள் களமிறங்க வேண்டும்' என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கடும் வறட்சி காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி, பல்வேறு மாவட்டங்களில், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, ரயில் வாயிலாக, குடிநீர் எடுத்து வர திட்டமிடப்பட்டு வருகிறது.இந்நிலையில், மழை வேண்டி, அனைத்து கோவில்களிலும், சிறப்பு யாகம் நடத்துவதற்கு, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில், நேற்று முன்தினம் வருண யாகம் நடத்தப்பட்டது.அன்றிரவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. தொடர்ச்சியாக, நேற்று கோவில்களில் மட்டுமின்றி, தேவாலயங்கள், மசூதிகள், தர்காக்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதேநேரத்தில், மழையில் கிடைக்கும் நீரை சேமிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை, அமைச்சர்கள் துரிதப்படுத்த வேண்டும். இதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஏரிகள், பொது மற்றும் கோவில் குளங்களை புனரமைக்கும் பணியில், அமைச்சர்கள் ஈடுபட வேண்டும்.இது, பொது மக்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புக்கும் வழி ஏற்படுத்தும். எனவே, கோவில்களில் யாகம் நடத்தியதை போன்று, நீர்நிலைகள் புனரமைப்பு பணியில், அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை, முதல்வர் வெளியிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். - நமது நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X