பொது செய்தி

தமிழ்நாடு

தென் மேற்கு பருவ மழையால் அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு

Added : ஜூன் 26, 2019
Advertisement

தென்மேற்கு பருவ மழையால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணைகளுக்கு, நீர்வரத்து துவங்கியுள்ளது.மேட்டூர், முல்லைப்பெரியாறு, பவானிசாகர், பரம்பிக்குளம் உள்ளிட்ட, 15 முக்கிய அணைகள் வாயிலாக, பல மாவட்டங்களின் பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பல அணைகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளதால், தென்மேற்கு பருவமழை காலங்களில் நீர்வரத்து கிடைப்பது வழக்கம்.அந்த வகையில், தற்போது, சில அணைகளுக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. கோவை - சோலையாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம், 1.6 செ.மீ., மழை பதிவானதால், அணைக்கு வினாடிக்கு, 397 கன அடி நீர்வரத்து கிடைத்துள்ளது.இதேபோல, திருநெல்வேலி - பாபநாசம் அணைக்கு, வினாடிக்கு, 684 கன அடி; கன்னியாகுமரி - பேச்சிப்பாறை அணைக்கு, வினாடிக்கு, 350 கன அடி; தேனி - முல்லை பெரியாறு அணைக்கு, வினாடிக்கு, 193 கன அடி நீர்வரத்து கிடைத்தது.கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த, 1.1 செ.மீ., மழையால், வினாடிக்கு, 216 கன அடி நீர்வரத்து கிடைத்தது.கர்நாடகா, கேரளா மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்பட்சத்தில், இந்த அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X