பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச தரத்தில் மைதானம்: மாற்றுத்திறனாளிகள் நிம்மதி

Added : ஜூன் 26, 2019
Share
Advertisement

திருப்பூர்:சர்வதேச தரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மைதானம் ஈரோட்டில் அமைய உள்ளது. இந்த அறிவிப்பு மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் மற்றும் ஆர்வலர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரோட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென பிரத்யேக மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ள நிலையில் இடம் தேர்வும் நடந்து வருகிறது.பத்து ஏக்கரில் பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், நீச்சல்குளம், கூடைப்பந்து மைதானம், தனி உடற்பயிற்சி மையம், கழிப்பிடம், சாய்வுதளம், பார்க்கிங் வசதியுடன் மைதானம் அமைய உள்ளது. இதனுடன், மாற்றுத்திறனாளிகள் விளையாடும் விளையாட்டுக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.மாநிலத்தில் தற்போது, 1,300க்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். தடகளம், நீச்சல், வீல்சேர் டென்னிஸ் மற்றும் கால்பந்து உள்ளிட்ட, 13 வகையான போட்டிகள் பாதுகாப்புடன் இவர்களுக்காக தனிப்பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்படுகிறது. சர்வதேச தரத்தில் மைதானம் அமையும் போது, கூடுதலாக மாற்றுத்திறனாளிகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X