ஐ.எஸ்., போலீஸ் அந்தஸ்து உயருது! அதிகாரிகள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.எஸ்., போலீஸ் அந்தஸ்து உயருது! அதிகாரிகள் மகிழ்ச்சி

Added : ஜூன் 26, 2019

திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீசில், ஐ.எஸ்., போலீஸ் பிரிவில், உதவி கமிஷனர், அந்தஸ்தில் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம், 2014ல் துவங்கப்பட்டது. கமிஷனர், இரு துணை கமிஷனர்கள், வடக்கு, தெற்கு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு, சமூக நீதி பிரிவுக்கு உதவி கமிஷனர்கள் உள்ளனர். எட்டு போலீஸ் ஸ்டேஷன்கள், தலா இரண்டு மகளிர் மற்றும் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றனர்.
கமிஷனர் அலுவலகம் துவக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும் 'சிட்டி' போலீஸ்க்கு தேவையான பல வசதிகள், பிரிவுகள் இன்னும் வரவில்லை. குறிப்பாக, வாடகை கட்டடத்தில் செயல்படும் கமிஷனர் அலுவலகத்தில் ஆரம்பித்து, மோப்ப நாய் பிரிவு, 'மாடர்ன் கன்ட்ரோல் ரூம்' உள்ளிட்ட பல வசதிகள் அடங்கும்.குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மாநகரில் நிலவும் போலீஸ் பற்றாக்குறை காரணமாக, போலீசாரின் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில், மாநகர போலீசில், ஐ.எஸ்., போலீஸ் பிரிவில், உதவி கமிஷனர் அந்தஸ்தில் போலீசார் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், திருப்பூரில், இன்ஸ்பெக்டர் அளவில் இருந்து வருகின்றனர்.
அந்தஸ்து உயருதுதிருப்பூர் மாநகர நுண்ணறிவு போலீஸ் பிரிவில் (ஐ.எஸ்.,) உதவி கமிஷனர் அந்தஸ்தில் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். குற்றப்பதிவேடு, கட்டுப்பாட்டு அறைக்கும் உதவி கமிஷனர் நியமிக்க உள்ளனர். இதற்கான நடவடிக்கையை கமிஷனர் சஞ்சய்குமார் மேற்கொண்டு உள்ளார். ஓரிரு மூன்று பிரிவுக்கும், உதவி கமிஷனர்கள் வர உள்ளனர்.அதேபோல், கமிஷனர் அலுவலகம், ஆயுதப்படை போலீசார், சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனுக்கான இடம் ஆகியவை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, விரைவில் இப்பணிகளும் துவங்கி விடும் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X