பொது செய்தி

தமிழ்நாடு

கணக்கில் வராத குடிநீர் இணைப்பு: ஆய்வின் கண்டுபிடித்து துண்டிப்பு

Added : ஜூன் 26, 2019
Advertisement
 கணக்கில் வராத குடிநீர் இணைப்பு: ஆய்வின் கண்டுபிடித்து துண்டிப்பு

பல்லடம்;பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம் புதுார் ஊராட்சியில், நேற்று, மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், ஒன்றிய பி.டி.ஓ., பாலமுருகன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., நடராஜன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், பல்வேறு பிரச்னைகள் குறித்து, பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். பல்லடம் வட்டாரத்துக்கு, அத்திக்கடவு, பில்லுார் குடிநீர் திட்டங்களின் கீழ், ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளுக்கும், சுற்று அடிப்படையில், வாரத்துக்கு ஒருமுறை, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இருப்பினும், பல்வேறு பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவது வாடிக்கையாக உள்ளது. அவ்வகையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும், வடுகபாளையம் புதுார் ஊராட்சியில், கடந்த சில ஆண்டுகளாகவே, குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது.இந்நிலையில், கணக்கில் காட்டாமல், புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக, நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் புகார் எழுந்தது. கணக்கில் காட்டாமல், பத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது, ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.தனியார் கேபிள் பதிப்பு பணியின்போது, குடிநீர் வினியோக பிரதான குழாயில் இருந்து, 2 இன்ச் பைப் மூலம், நேரடியாக, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. அது, ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்டு, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டது.ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி கூறுகையில், ''தற்போதைக்கு யாருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதில்லை.
ஆனால், குடிநீர் வினியோகிக்கும் பணியாளர் மூலம், கடந்த ஒரு வாரத்துக்கு முன், இதுபோன்று கணக்கில் வராமல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்டு, இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இது போன்ற முறைகேடான சம்பவங்கள், ஆங்காங்கே நடைபெற்று வருவதால், பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர், முறையாக சென்று சேர்வதில்லை.அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, முறைகேடாக இணைப்பு வழங்குவதை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X