பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர், காஞ்சி ஏரிகளை புனரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு

Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (1)
Advertisement


நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, 68 ஏரிகளை புனரமைக்க, குடிமராமத்து திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், 605 ஏரிகள்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், 949 ஏரிகள் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளன. குடிநீர் தேவைதிருவள்ளூர் மாவட்டத்தில், சென்னைக்கு குடிநீர் வழங்கும், புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளும், பூண்டி நீர்த்தேக்கமும் உள்ளன. வறட்சியால், இந்த ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.எனவே, திருவள்ளூர் மாவட்டத்தின், நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, கல்குவாரி குட்டைகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.இது, போதுமானதாக இல்லை. நிலத்தடி நீரும் கிடைக்காததால்,தண்ணீருக்காக மக்கள் தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையினர், ஏரிகளை முழுமையாக துார்வாரி, பராமரிக்காததே, இந்த சிக்கலுக்கு காரணம்.அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பல நீர்நிலைகள் காணாமல் போனதுடன், துார்ந்தும் கிடக்கின்றன.குடிமராமத்துஇது குறித்து, நம்நாளிதழில் தொடர்ந்து, செய்திகள் வெளியிடப்படுகிறது.சமீபத்தில், ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டத்திற்கு, தமிழக அரசு, 500 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.இதில், திருவள்ளூரில், 30; காஞ்சிபுரத்தில், 38 ஏரிகளை புனரமைக்க, தற்போது, 25.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு, 10.17 கோடி ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத் திற்கு, 15.22 கோடி ரூபாயும் செலவிடப்பட உள்ளது.புனரமைப்புஇந்த நிதியில் ஏரிகள் புனரமைப்பு மட்டுமின்றி, அவற்றின் நீர்வரத்து கால்வாய்கள் பலப்படுத்தப்பட உள்ளன. இதனால், ஏரிகளுக்கான நீர்வரத்து உறுதி செய்யப்படும்.தமிழக அரசு உத்தரவின்படி, ஏரிகள் புனரமைப்பு பணிகள், விரைவில் துவங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, சென்னை மண்டல பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்கின்றனர்.மழைக்கு முன் முடிக்க வேண்டும்!'வட கிழக்கு பருவ மழை, அக்டோபரில் துவங்கி விடும். அதற்கு, மூன்று மாதங்களேஉள்ளதால், ஏரிகள் சீரமைப்பதுஅவசியம்.அரசு நடைமுறைகளின்படி, விவசாயிகளை ஒருங்கிணைத்து, சங்கம் அமைத்து, 'டெண்டர்' விட்டு, பணிகளை துவங்குவதற்குள், மூன்று மாதம் முடிந்து விடும். அதுபோல இல்லாமல், பருவமழைக்கு முன், பணிகளை முடிக்கும் வகையில், அரசு பணிகளை முடுக்கி விட வேண்டும்.கடைசி நேரத்தில் பணிகளை துவக்கி, மழை துவங்கியதும்,'பணிகளை முடித்து விட்டோம்' என,அதிகாரிகள் கணக்கு காட்ட, அரசு வழி வகுத்து விடாமல், முன் யோசனையுடன் செயல்பட வேண்டும்.


- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
26-ஜூன்-201917:22:50 IST Report Abuse
r.sundaram தூர்வார கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கினால் மட்டும் போதாது. வேலைகள் ஒழுங்காக நடக்க வேண்டும். இவனுக்கு பத்து, அவருக்கு பத்து என்று பலருக்கும் கமிசன் வழிந்து ஓடினால் பலன் கிடையாது. வேலைகள் ஒழுங்காக நடக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X