பொது செய்தி

இந்தியா

ஆசிரியர்களுக்கு ஆற்றல் மேம்பாட்டு கருத்தரங்கம்

Added : ஜூன் 26, 2019
Advertisement
 ஆசிரியர்களுக்கு ஆற்றல் மேம்பாட்டு கருத்தரங்கம்

காரைக்கால்:காரைக்கால் என்.ஐ.டி.,சார்பில் பல்வேறு மாநில ஆசிரியர்களுக்கு ஆற்றல் மேம்பாட்டு குறித்த கருத்தரங்கம் தொடங்கியது.
காரைக்காலில் இயங்கி வரும், தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) மெக்கானிக்கல் துறை சார்பில் அண்மை கால நவீன மேம்பாடு குறித்து ஐந்து நாள் கருத்தரங்கம் என்.ஐ.டி.,வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.கருத்தரங்கை என்.ஐ.டி., இயக்குநர் சங்கரநாராயணசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து, சமீப கால மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விவதிக்கப்பட்டது.சூரிய ஆற்றலின் பயன்பாடு, கியர் வடிவமைப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்பு, இயற்கை இழை கலவை, ரொபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், கோட்பாடு மற்றும் சோதனை திரவ இயக்கவியல், செயற்கை நுண்ணறிவு, பொருள்களின் முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.கருத்தரங்கில் கர்நாடகா,ஆந்திரா,உத்தரகாண்ட் மற்றும் கோயம்புத்துார், காரைக்கால் பகுதி பொறியியல் நிறுவனங்கள் மற்றும் என்.ஐ.டி.,ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.கருத்தரங்க ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், சிவராம், ராஜூ பாகுபாலேந்திருனி, ஜானி மார்டின், வடிவுக்கரசன், நரேந்திரன், ராஜகோபாலன் ஆகியோர் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X