மக்கள் எழுச்சியால் ஏரியை சீரமைக்க குதித்த பொதுநல அமைப்புகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் எழுச்சியால் ஏரியை சீரமைக்க குதித்த பொதுநல அமைப்புகள்

Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (1)
 மக்கள் எழுச்சியால் ஏரியை சீரமைக்க குதித்த பொதுநல அமைப்புகள்

சிட்லபாக்கம் ஏரி சீரமைப்பில், பொதுநல அமைப்பினர் ஆர்வமுடன் பங்கேற்பது குறித்து, நம் நாளிதழில், முதல் பக்கத்தில், படத்துடன் செய்தி வெளியான நிலையில், பொதுப்பணித்துறையும் களத்தில் குதித்துள்ளது.இயந்திரங்களை பயன்படுத்தி, ஏரியை துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது.விழிப்புணர்வுசென்னை, குரோம்பேட்டையை அடுத்த, சிட்லபாக்கம் பேரூராட்சியில், பெரிய ஏரி உள்ளது. 200 ஏக்கர் பரப்பிலான ஏரி, ஆக்கிரமிப்புக்களில் சிக்கி, தற்போது, 95 ஏக்கராக சுருங்கி விட்டது.ஏரியை பாதுகாக்க வேண்டிய, உள்ளாட்சி அமைப்புகளே, கழிவுநீரை செலுத்தியும், குப்பை கொட்டியும், ஏரியை பாழாக்கி வருகின்றன.'பருவமழைக்கு முன் ஏரியை சீரமைக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுப்பணித் துறை கண்டு கொள்ளாததால், பொதுநல அமைப்புக்கள்,ஏரியை சீரமைக்கும் பணியில் குதித்தன.தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என்றும், பொதுநல அமைப்புக்கள், நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், நம் நாளிதழில் அறிவிப்பும், விழிப்புணர்வு செய்திகளும் வெளியிடப்பட்டன. இதையடுத்து, ரஜினி மன்றத்தினர், தன்னார்வலர்கள் என, ஏராளமானோர், சிட்லபாக்கம் ஏரி சீரமைப்பில் குவிந்தனர்.ஏரியில் முகாம்இது குறித்து, நம் நாளிதழின் முதல் பக்கத்தில், நேற்று படத்துடன் விரிவான செய்தி வெளியானது. சீரமைப்பு பணி, மக்கள்எழுச்சியாக மாறி வருவதை அறிந்த தமிழக அரசு, பொதுப்பணித்துறையை, நேற்று உடனடியாக களமிறக்கியது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏரியில் முகாமிட்டனர். இரண்டு, ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக, துார் வாரும் பணி நடந்து வருகிறது. 'ஏரி, 2 அடி ஆழத்திற்கு துார் வாரப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, சீரமைப்பில் ஈடுபட்ட தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:ஏரி சீரமைப்பில் பங்கேற்ற மக்களை அங்கீகரிக்கும் வகையிலும், ஏரிகள் சீரமைப்பின் அவசியத்தை அரசுக்கு உணர்ந்தும் வகையிலும், 'தினமலர்' நாளிதழில், நேற்று முதல் பக்க செய்தி வெளியானது. இந்நிலையில், இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த, பொதுப்பணித் துறையும் களத்திற்கு வந்து விட்டது.பருவ மழைக்குள், ஏரி சீரமைக்கப்பட்டு விடும். இதனால், மழைநீர் தேங்கும்; எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னை வராது. ஏரி சீரமைப்பில், அரசின் செயல்பாட்டுக்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர்- -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X