பொது செய்தி

தமிழ்நாடு

விழாவில், துணை கமிஷனர் தகவல்

Added : ஜூன் 26, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர், குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், மனித கடத்தல் எதிர்ப்பு மன்ற துவக்க விழா நேற்று நடந்தது.இதனை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் துவக்கி வைத்து பேசியதாவது:வெறும் பாலியல் ரீதியான பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் மனித உறுப்புகளை விற்பனை செய்வதற்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். சர்வதேச கடத்தல் எதிர்ப்பு ஆணையம் நிறுவுதல் அவசியம்.பாலியல் தொழில் மற்றும் கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்டெடுக்க வேண்டும். இதில் மாணவர்களுக்கும் பங்குண்டு. இம்மன்றத்தின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தலாம். இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்றார். விழுதுகள் அமைப்பு இயக்குனர் தங்கவேல் பாதிக்கப்பட்டவர்களை சட்டரீதியாக அணுகுவது குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் சாலமன் ஆண்டணி கல்லுாரியில் துவங்கிய மாணவர் மன்றத்தின் பணிகள், அதன் நோக்கங்களை விவரித்தார். தொடர்ந்து, விழுதுகள் அமைப்பினர், கடத்தப்படும் குழந்தை தொழிலாளர்களின் அவலநிலையை நாடகம் மூலம் விளக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X