பொது செய்தி

இந்தியா

சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இலவச சட்ட சேவை சிறப்பு முகாம்

Added : ஜூன் 26, 2019
Advertisement
 சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இலவச சட்ட சேவை சிறப்பு முகாம்

புதுச்சேரி:காலாப்பட்டில், சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் நடந்த சட்ட சேவை முகாமில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில், சட்ட சேவை சிறப்பு முகாமை, பெரிய காலாப்பட்டில் நேற்று நடத்தியது. இது, இந்த ஆண்டின் முதல் சட்ட சேவை சிறப்பு முகாம் ஆகும். பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறையால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், பான்கேர் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.காலாப்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த 521 பேர் பங்கேற்றனர். 120 பேர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியமான சோபான தேவி தலைமையில் நடந்த முகாமில், சட்டப் பணிகள் ஆணைய செயலர் மற்றம் சார்பு நீதிபதி எழிலரசி, கூடுதல் சார்பு நீதிபதி ரோகிணி, மாநில சட்டப்பணிகள் ஆணைய பட்டியல் வழக்கறிஞர்கள், சட்ட தன்னார்வலர்கள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X