பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் கேட்டு மலைப்பட்டில் போராட்டம்

Added : ஜூன் 26, 2019
Advertisement

மலைப்பட்டு : மலைப்பட்டு கிராமத்தில், காலி குடங்களுடன், குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.குன்றத்துார் ஒன்றியம், மலைப்பட்டு ஊராட்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இங்கு, மூன்று மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், அப்பகுதி பெண்கள், 50க்கும் மேற்பட்டோர், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் ஸ்ரீபெரும்புதூர்- - தாம்பரம் சாலையில், மலைப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே, மறியல் போராட்டத்தில் ஈடுபட நேற்று ஒன்று திரண்டனர்.சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார், இரண்டு நாட்களில் குடிநீர் பிரச்னையை சரி செய்ய, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக கூறி, சமாதானம் செய்து அனுப்பினர்.

இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, காலை அரை மணி நேரம் மட்டுமே தெருக்குழாயில் தண்ணீர் விடப்படுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிப்படுகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X