பொது செய்தி

தமிழ்நாடு

முடி திருத்துவோர் சங்க விழா

Added : ஜூன் 26, 2019
Advertisement

மாமல்லபுரம் : தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர், மருத்துவர் சமூக நலச் சங்கங்கள் சார்பில், முப்பெரும் விழா, புதுப்பட்டினத்தில் நடந்தது

கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள், எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ், 134ம் பிறந்த நாள்; க.வைரப்பன், 113ம் பிறந்த நாள்; சங்க மாநில தலைவர், எம்.நடேசன், 70ம் பிறந்தநாள் விழா என, முப்பெரும் விழா நடந்தது.புதுப்பட்டினம் பஸ் நிலைய பகுதியில், சங்கக்கொடி ஏற்றி, மங்கல இசையுடன், பேரணி சென்று, திருமண மண்டபத்தில், விழா கொண்டாடினர்.

மாவட்ட தலைவர், ஏ.ஜெகதீசன் தலைமை வகிக்க, மாநில தலைவர், நடேசன், துணைத் தலைவர், எம்.கணேசன், மாநில பொதுச் செயலர், ஏ.ராஜன், மாவட்ட செயலர், இ.குமார் உட்பட, பலர் பங்கேற்றனர்.தெற்காசிய சிலம்ப விளையாட்டில், தங்கம் வென்ற, கே.யாகதர்ஷினி, ஆர்.காயத்திரி ராசு ஆகியோருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட சங்கம் சார்பில், கவுரவித்தனர். விஸ்வநாததாசிற்கு, சென்னையில் சிலை அமைக்க, அரசு இடம் வழங்க வேண்டும், இவரது வரலாறு, அரசு பாடநுாலில் இடம் பெற வேண்டும், 20 சதவீத இடஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடாக, 5 சதவீதம் அளிக்க வேண்டும்.இச்சமூக பாதுகாப்பிற்கு, வன்கொடுமைச் சட்டத்தில் இணைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X