மோடியின் முகத்தில் விவேகானந்தர்: ரவீந்திரநாத் குமார்| Dinamalar

'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் குமார்

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (69)
Share
புதுடில்லி: பிரதமர் மோடியின் முகத்தில் விவேகானந்தரை காண்கிறேன் என அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.பார்லி., கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் குமார் பேசியதாவது: சுவாமி விவேகானந்தர், 'எனக்கு வலிமையான, 100 இளைஞர்களை மட்டும்

புதுடில்லி: பிரதமர் மோடியின் முகத்தில் விவேகானந்தரை காண்கிறேன் என அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.



latest tamil news



பார்லி., கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் குமார் பேசியதாவது: சுவாமி விவேகானந்தர், 'எனக்கு வலிமையான, 100 இளைஞர்களை மட்டும் தாருங்கள். இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்' என்றார். அந்த விவேகானந்தரைத்தான், நமது பிரதமர் மோடியின் முகத்தில் காண்கிறேன்.

தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தபட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, நாடு முழுவதும் விரிவாக்க வேண்டும். இதற்கென, தனி மசோதா கொண்டுவர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


latest tamil news




ஹிந்தியில் பேச்சு:


அடுத்து, பகவத் கீதையில் இருந்து சில வரிகளை, ஹிந்தியில் பேசினார் ரவீந்திரநாத். அதன் பொருள்: மிகப்பெரிய மனிதரின் செயல் களைத்தான், மக்கள் பின்பற்றுவார்கள். அவரின் தன்னிகரற்ற செயல்கள் மூலம் எத்தகைய இலக்கை நிர்ணயிக்கிறாரோ, அது, இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X