பொது செய்தி

தமிழ்நாடு

வங்க கடலில் புயல் சின்னம்?

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: சென்னை உட்பட, 13 மாவட்டங்களில், இன்று(ஜூன் 26) மழை பெய்யும்.இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதி களில், தீவிரம் அடைந்து வருகிறது. கன்னியாகுமரி முதல், குஜராத் வரையில், அரபிக்கடல் பகுதியிலும்; அந்தமான் முதல், மேற்கு வங்கம் வரையில், வங்கக்கடல் பகுதியிலும், தென்மேற்கு பருவமழை

சென்னை: சென்னை உட்பட, 13 மாவட்டங்களில், இன்று(ஜூன் 26) மழை பெய்யும்.



latest tamil news



இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதி களில், தீவிரம் அடைந்து வருகிறது. கன்னியாகுமரி முதல், குஜராத் வரையில், அரபிக்கடல் பகுதியிலும்; அந்தமான் முதல், மேற்கு வங்கம் வரையில், வங்கக்கடல் பகுதியிலும், தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது. தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மட்டும், மலை பகுதிகளில் பருவ மழை பெய்கிறது; மற்ற இடங்களில் லேசான துாறலும், வெயிலும் நிலவுகிறது.


latest tamil news



இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலுார், விழுப்புரம், கடலுார், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், இன்று லேசானது முதல், மிதமானது வரையில் மழை பெய்யும். வங்க கடல் பகுதியில், வரும், 30ல், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு, வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-201912:22:36 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) வருண பகவானை வேண்டுவோம் அவர் நிச்சயம் கருணை காட்டுவார் ,
Rate this:
Cancel
hari - CHENNAI,இந்தியா
26-ஜூன்-201908:41:06 IST Report Abuse
hari ரெட் அலெர்ட், கிறீன் அலெர்ட் எதையாவது சொல்லி மழையை விரட்டிவிடாதீர்கள்.
Rate this:
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
26-ஜூன்-201911:10:04 IST Report Abuse
Krishnamoorthi A Nஎச்சரிக்கை செய்யாவிட்டால் மழையினால் பாதிப்பு வரும்போது முன்கூட்டி அறிவிக்கவில்லை என்றும் குற்றம் கூறுவார்கள்...
Rate this:
Cancel
oce - tokyo,ஜப்பான்
26-ஜூன்-201906:26:16 IST Report Abuse
oce வங்க கடல் புயல் மழையினால் சென்னையின் தண்ணீர் பஞ்சம் முழுமையாக நீங்கி விடும். சென்னை கேசவ பெருமாள் மற்றும் சென்னை மல்லீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு இந்த மழை காணிக்கை. .
Rate this:
skv - Bangalore,இந்தியா
28-ஜூன்-201917:49:12 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>எங்கள் பார்த்தசாரதி பெருமாளை விட்டுட்டீங்களே நியாயமா அல்லிக்கேனிலே நின்னுண்டு மலைக்கு காத்துண்டுருக்காரே திருவட்டீஸ்வரர் கோயில்லே குளம் வெற்றி எவ்ளோகாலம் ஆச்சு எவனாச்சும் கண்டுண்டானா ஓட்டுகேக்கவரானுகளே கூட்டமா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X