வங்க கடலில் புயல் சின்னம்? | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வங்க கடலில் புயல் சின்னம்?

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (6)
Share
சென்னை: சென்னை உட்பட, 13 மாவட்டங்களில், இன்று(ஜூன் 26) மழை பெய்யும்.இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதி களில், தீவிரம் அடைந்து வருகிறது. கன்னியாகுமரி முதல், குஜராத் வரையில், அரபிக்கடல் பகுதியிலும்; அந்தமான் முதல், மேற்கு வங்கம் வரையில், வங்கக்கடல் பகுதியிலும், தென்மேற்கு பருவமழை

சென்னை: சென்னை உட்பட, 13 மாவட்டங்களில், இன்று(ஜூன் 26) மழை பெய்யும்.



latest tamil news



இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதி களில், தீவிரம் அடைந்து வருகிறது. கன்னியாகுமரி முதல், குஜராத் வரையில், அரபிக்கடல் பகுதியிலும்; அந்தமான் முதல், மேற்கு வங்கம் வரையில், வங்கக்கடல் பகுதியிலும், தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது. தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மட்டும், மலை பகுதிகளில் பருவ மழை பெய்கிறது; மற்ற இடங்களில் லேசான துாறலும், வெயிலும் நிலவுகிறது.


latest tamil news



இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலுார், விழுப்புரம், கடலுார், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், இன்று லேசானது முதல், மிதமானது வரையில் மழை பெய்யும். வங்க கடல் பகுதியில், வரும், 30ல், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு, வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X