புதுடில்லி: ரயில் நிலையங்களின், இலவச, 'வை-பை' இணைய இணைப்பை, கடந்த மே மாதத்தில் மட்டும், 2.35 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டிற்குள், 4,791 நிலையங்களில், இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

'ரயில்டெல்' எனப்படும், இந்திய ரயில்வே துறையின், தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும், 1,606 ரயில் நிலையங்களில், இலவச, வை-பை வசதி உள்ளது. அதை, மே மாதத்தில், 2.35 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். இதில், கோல்கட்டா, டில்லி மற்றும் மும்பை ரயில் நிலையங்களில், மிக அதிகமானோர் பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, கோல்கட்டாவின் ஹவுரா நிலையத்தில் மட்டும், 4.9 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டிற்குள், மேலும், 4,791 நிலையங்களில், இந்த வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு, ரயில்டெல் கூறியுள்ளது. ரயில் நிலையங்களில், இலவச வை-பை வசதி, 2016ல் தான் அறிமுகம் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE