கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கிழக்கே மழை; மேற்கே வெயில்

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (1)
Advertisement
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மழை, வெயில், இந்திய வானிலை மையம்

புதுடில்லி : வங்கக் கடலில் வரும் 30ம் தேதி அன்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக வடகிழக்கு இந்திய பகுதிகளில் மழை பெய்யும் என்றும், மேற்கு பகுதிகளில் வெயில் அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அம்மையம் கூறுகையில், ''வடக்கு வங்க கடலில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் . இதன் காரணமாக, ஜூலை ஒன்று முதல் 3 ஆம் தேதி வரை, வடகிழக்கு, கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்தியா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேவேளையில், வடமேற்கு இந்தியாவில் அடுத்த 4 தினங்களுக்கு வெப்ப நிலை இரண்டில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும், '' என்று அதில் தெரிவித்துள்ளது.அதேநேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Changes - Pkt,இந்தியா
26-ஜூன்-201913:28:46 IST Report Abuse
Changes "அதேநேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான் என்றும் கூறப்பட்டுள்ளது". No Problem
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X