பொது செய்தி

இந்தியா

தந்தையா தாய்நாடா?; வீராங்கனை உறுதி

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி : தாய் நாட்டுக்காக ஹாக்கிப்போட்டியில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறவேண்டும் என்ற உறுதியில், தந்தையின் இறுதி நிகழ்ச்சிக்கு கூட செல்லாத வீராங்கனை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.


தந்தை இறுதிச்சடங்கு :


தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காமல் நாட்டுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனை, நாடு திரும்பியபோது தன் தாயைக் கட்டிக்கொண்டு அழும் காட்சி வீடியோ வெளியாகி, காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


வீராங்கனை லாம்ரெம் ஸியாமிஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் எப்ஐஎச் எனும் மகளிர் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. இதில், லால்ரெம் ஸியாமி என்ற 19 வயது ஹாக்கி வீராங்கனை இந்திய அணிக்காக விளையாடினார். இவர் மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர். அவரது தந்தை லால்தன்சங்கா ஸோடெ கடந்த வெள்ளியன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

போட்டியில் வெற்றி


ஆனால், மறுநாள் இந்தியா-சிலி அணிகளுக்கிடையேயான அரையிறுதிப் போட்டி இருந்தது. அதில் வென்றால்தான், இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.இந்த சூழலில் இந்திய அணி வீராங்கனை லால்ரெம் ஸியாமி, தன் தந்தையின் மரணம் அறிந்து இடிந்துபோனார். ஆனாலும், தாய் நாட்டின் வெற்றியை மனதில் கொண்டு இறுதிச்சடங்கில் பங்கேற்பதில்லை என்று கனத்த மனதோடு முடிவெடுத்தார்.


திரும்பிய பின் அழுகை!இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி நேற்று மிஸோரமில் உள்ள தனது கிராமத்துக்கு சென்றார். அங்கு, தனது தாயை கட்டி அணைத்துக் கொண்டு ஹாக்கி வீராங்கனை கதறி அழும் காட்சி, காண்போர் கண்களை குளம் ஆக்குகிறது.


Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
26-ஜூன்-201917:55:03 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Sometimes the family people persuade the player to say back and play.Her father's body could have been preserved till her return.
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
26-ஜூன்-201917:13:48 IST Report Abuse
JIVAN தந்தையின் உடலை இரண்டு மூன்று நாட்கள் பதப்படுத்தி இருந்திருக்கலாம் பிறகு அவர் வந்தபின் அடக்கம் செய்திருக்கலாம் . வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் வரும்வரை இப்படி செய்வதை பார்த்திருக்கிறோம் அவர்களுக்கு வசதி இல்லையென்றால் யாரேனும் உதவி இருக்காலம் . வருத்தமான நிகழ்வு .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-ஜூன்-201916:27:17 IST Report Abuse
Endrum Indian மிகவும் வருத்தமான நிகழ்வு. நான் தலைப்பை படித்தவுடன் நினைத்தது??தந்தை நாடா??? தாய் நாடா???அப்போ இது இந்தியாவில் வாழும் பாகிஸ்தானிய முஸ்லீம் பற்றி தான் இருக்கும் என்று, உள்ளே படித்தவுடன் தான் உண்மை புரிந்தது.
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
26-ஜூன்-201917:08:05 IST Report Abuse
JIVANஇருபத்திநாலு மணிநேரமும் அப்படியே இருக்காதிங்க வேறு வந்திடப் போகுது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X