பொது செய்தி

இந்தியா

அசாம் குடிமக்கள் பட்டியல்: 1 லட்சம் பேர் நீக்கம்

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (13)
Advertisement

கவுகாத்தி : அசாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலில் இருந்து மேலும் 1.02 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





வங்க தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக அசாமில் குடியேறுபவர்களை கணக்கிடும் பெருட்டு, 1951 ம் ஆண்டு முதல் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் புதுப்பிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.




இதில் லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இறுதி தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் வரும் ஜூலை 31 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.






இதற்கான வரைவு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் மேலும் 1.02 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஜூலை 11 ம் தேதி முதல் அமைக்கப்படும் உதவி மையங்களை அனுகி, உரிய ஆதாரங்களுடன் பதிவு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
26-ஜூன்-201918:59:57 IST Report Abuse
Indhuindian தயவு தாட்சண்யம் பாக்காம வெரட்டி அடியுங்க. திருட்டு தனமா இங்கேவந்துட்டு இருக்கற பெனிபிடெல்லாம் அனுபவிச்சிக்கிட்டு தீவிரவாத கும்பல் இது
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
26-ஜூன்-201917:18:07 IST Report Abuse
G.BABU இறுதிப்பட்டியல் ஜூலை 31 ம் திகதி வெளியிடப்பட்டவுடன் ....சகல சட்டவிரோத குடியேற்றவாசிகளும் நாடுகடத்தப்படுவதற்கு காலவரையறையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும். தேவைப்பட்டால் மக்களவையில் ஓர் சட்டமூலம் நிறைவேற்ற வேண்டும். இந்தியாவையும் அதன் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க மத்திய அரசு உடன் செயல்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூன்-201916:50:15 IST Report Abuse
RajanRajan அப்போ மம்மு பேகம் பீல்டு அவுட். என்ன ஒரு தந்திரம் பங்காளதேஷிகளை இந்திய குடிமக்களாக்கி ஆட்டம் போட்டு தெரு கூத்து பண்ணி விட்டார். குட்டு இப்போ வெளியாகி விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X