பொது செய்தி

இந்தியா

உளவு துறைகளுக்கு புதிய தலைவர்கள்

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி : ரா மற்றம் புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி.





அமைச்சரவையில் நியமனக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார் பிரதமர் மோடி. இவர் இன்று, புலனாய்வு பிரிவின் (ஐ.பி.,) புதிய தலைவராக அரவிந்த் குமாரையும், ரா.,வின் புதிய தலைவராக சமந்த் கோயலையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
பா.ஜ., அரசின் பெரிய சாதனைகளாக அண்டை நாடுகளால் பார்க்கப்படும் 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் 2019 பிப்ரவரியில் நடத்தப்பட்ட பாலாகோட் விமானப்படை தாக்குதல் திட்டம் வகுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




அரவிந்த் குமார், காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் கைதேர்ந்தவராக திகழ்ந்தவர். அசாமில் போலீஸ் அதிகாரியாக பணியை துவங்கிய இவர், பிறகு புலனாய்வு பிரிவில் இணைந்து மத்திய அரசிற்காக பணியாற்றி வந்தவர்.
சமந்த் கோயல், 1990களில் பயங்கரவாத தாக்குதல்கள் பஞ்சாப்பில் உச்சத்தில் இருந்த சமயத்தில், பாக்., ஊடுவலையும், பயங்கரவாதத்தை திறம்பட கையாண்டவர். பிறகு ரா மூத்த அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியவர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju Sundaresan - Edison,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201901:40:06 IST Report Abuse
Raju Sundaresan வெயில் ரொம்பதான் கொளுத்துது.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூன்-201916:40:19 IST Report Abuse
RajanRajan திறமை மிக்க அதிகாரிகளாக திகழும் அரவிந்த்-சமன்த் ஆகியோரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
26-ஜூன்-201914:27:12 IST Report Abuse
SENTHIL NATHAN தஞ்சாவூரில் வெய்யில் அதிகம் போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X