பொது செய்தி

இந்தியா

புல்வாமா தாக்குதல் சதிகாரர்கள் கண்டுபிடிப்பு: மத்திய அரசு

Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தாக்குதல் தொடர்பாக ராஜ்யசபாவில் உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எல்லைக்கு அப்பால் இருந்து உதவியும் ஆதரவும் கிடைக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. அவர்களுக்கு எதிராக ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. புல்வாமா தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ., விசாரணை நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு வாகனத்தை அளித்து உதவியவர், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர், சதிகாரர்கள் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-201920:30:09 IST Report Abuse
ஆப்பு எத்தனை செல்போன்களைக் கொன்னீங்க?
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
26-ஜூன்-201915:50:45 IST Report Abuse
DSM .S/o PLM காங்கி :- அதெல்லாம் ஒப்பு கொள்ள முடியாது.. கண்டு பிடிக்கவில்லை.. ஆதாரம் இருக்கா. இவன்தான் குண்டுவைத்தான் என்பதற்கு என்ன ஆதாரம்.. காவி :- சரி சரி அந்த மணி சங்கர் ஐயர் எங்கே ஒளிஞ்சிருக்கான் . அதைச்சொல்லிட்டு கூவு .. காங்கி :- மோடி ஆட்சியில் சர்வாதிகாரம் தலை விரித்து ஆடுகிறது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X