இவிஎம்: ராகுலை ஆதரிக்காத சோனியா

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு (இவிஎம்) இயந்திரங்களால் தான் பா.ஜ., அரசு அமைந்தது என்று நாடு தழுவிய போராட்டம் நடத்த ராகுல் முடிவு செய்துள்ளார்.latest tamil newsசோனியா ஆதரவில்லை :


ஆனால், சோனியா இதை நம்பவில்லை. பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ள ஆதரவை, இவிஎம் மீது சுமத்தி கேள்வி எழுப்பினால் அது தங்களுக்கு எதிராகவே, பூமராங் போல திரும்பக் கூடும் என்று அவர் நினைக்கிறார்.
ஏனெனில், அவ்வாறு சந்தேகம் கிளப்பினால் இவிஎம் மிஷின்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்ற 4 லோக்சபா தேர்தல்கள் மற்றும் 113 முறை நடந்துள்ள மாநில சட்டமன்ற தேர்தல்களும் கேள்விக்குள்ளாகும். ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய மோடி, இதனை குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் மற்ற கட்சிகளுடன் கைகோர்க்க வேண்டும். தேவைப்பட்டால் நடக்க உள்ள மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையை வலியுறுத்தி தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் ராகுல் நினைக்கிறார்.


latest tamil newsமூத்த தலைவர்கள் எதிர்ப்பு:

ராகுலின் இந்த முடிவை பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எதிர்க்கின்றனர். அவ்வாறு புறக்கணித்தால் காங்கிரசின் இடத்தை இதர மாநிலக் கட்சிகள் பிடித்துவிடும் என்கின்றனர்.இவிஎம் மிஷின்கள் மீது சந்தேகப்படுவது கடந்தாண்டு காங்கிரஸ் வென்ற சதீஷ்கர், ராஜஸ்தான் மத்திய பிரதேச மாநில வெற்றியின் நம்பகத்தன்மை மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்கிற சோனியாவின் கருத்தையே மூத்த காங்கிரஸ் தலைவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.


latest tamil newsராகுல் ஏன் எதிர்க்கிறார்?

2019 லோக்சபா தேர்தலில், இவிஎம் மிஷின்களில் ''மோசடி'' செய்தே பா.ஜ., வெற்றிபெற்றுள்ளது என்று காங்கிரசின் டேட்டா ஆய்வு மையத் தலைவர் பிரவின் சக்கரவர்த்தி அளித்த அறிக்கையை ராகுல் நம்புகிறார்.
அவர், கடந்த ஓராண்டில் புதிதாக வாங்கிய இவிஎம் மிஷின்களில், இந்த மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என்று கட்சி தலைவர்களிடம் கூறியுள்ளார். மேலும், 164 முதல் 184 வரை காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பிருந்த நிலை குறித்தும் சக்கரவர்த்தியின் விளக்கங்களை ராகுல் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனவே தான் ராகுல், ஓட்டுச் சீட்டுமுறையை கொண்டுவரக்கோரி போராடுவது மட்டுமே, பா.ஜ.,வை எதிர்கொள்வதற்கு ஒரே வழி என்றும் நம்புகிறார்.


latest tamil newsசக்ரவர்த்தியின் தவறான வழிகாட்டுதல்

சமீபத்தில், லோக்சபா தேர்தல் தோல்விகளுக்கு ராகுலை தவறாக வழிநடத்தியது காங்கிரசின் டேட்டா ஆய்வு மைய தலைவர் சக்ரவர்த்தி தான் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
ஏனெனில், காங்கிரஸ் 184 எம்.பி., தொகுதிகளில் வெற்றிபெறும். மோடி மீண்டும் அதிகாரத்திற்கு வரமுடியாது என்று ராகுலை நம்ப வைத்தது சக்ரவர்த்தி தான் என்கின்றனர் அந்த தலைவர்கள்.


Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
27-ஜூன்-201908:47:07 IST Report Abuse
arudra1951 கோளாறு ஒட்டு போடும் இயந்திரத்தில் இல்லை .90% மக்கள் காசுக்காக ஓட்டுக்களை விற்கிறார்கள் என்பதே உண்மை . தேவனிடத்தில் பணபலம் இருக்கிறதோ அவன் ஜெயிப்பான், சினிமா நடிகனாயிருந்தாலும் ,நடிகையாயிருந்தாலும் ஜெயிப்பார்கள் .இது ஒரு பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு . .
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூன்-201904:10:12 IST Report Abuse
meenakshisundaram இது thimuka வின் பொய் பிரச்சார வித்தைகளில் ஒன்று, பாவம் சின்னப்பையன் பயந்து போயி என்ன செயதுன்னு தெரியாம உளற ஆரம்பிச்சாச்சு,,தமிழன் மாதிரி மத்தவன் இருக்கமாட்டான் ,ஏமாறுவது தமிழனின் பிறப்புரிமை ,ஏமாற்றுவது திமுகவின் பிறப்புரிமை
Rate this:
Share this comment
Cancel
swaminathan - london,யுனைடெட் கிங்டம்
27-ஜூன்-201902:06:35 IST Report Abuse
swaminathan நான் பொதுவாக பாஜக வை ஆதரிக்கிறவன்தான். ஆனால் போகிற போக்கில் ராகுலை எல்லோரும் பரிகசித்து எழுதி இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. சில மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணிக் காட்சிகள் வெற்றி பெற்று இருக்கிறதே என கேள்வி எழுப்புகின்றனர். நாதரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யவேண்டும். மோசடி செய்தாலும் நம்பும்படி இருக்கவேண்டும் என்பது வாசகர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மோடி, அமித் ஷா மிகவும் விவரமானவர்கள். ஆனால் எனக்கும் கூட ஒரு சந்தேகம். ஆறு மாசங்களுக்கு முன்னாள் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் 25/25 பாஜக வெற்றி. ஜூன் 10 ஆம் தேதி நடந்த சில உள்ளாட்சி இடைத்தேர்தலில் மொத்த 17 இடங்களில் காங்கிரஸ் 10 ( காங்கிரஸ் 8 + காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை 2 ) பாஜக 5 மற்றும் சுயேச்சை 2 இடங்களில் வெற்றி. இவ்வளவு மாறி மாறி வாக்கு அளிக்கும் அளவிற்கு நம் மக்கள் அறிவு முதிர்ச்சி அடைந்து விட்டார்களா? எனக்கு முழுமையாக நம்பிக்கை வரவில்லை.
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201906:53:56 IST Report Abuse
uthappaகண்டிப்பாக நீங்கள் பா ஜெ கா வை ஆதரிப்பவர் இல்லை.சில தொகுதிகள் சேர்ந்ததுதான் ஒரு பாராளுமன்ற தொகுதி.நீங்கள் சொன்ன அந்த மாநிலங்களில் ஏழு தொகுதிகளில் (லோக்சபா தொகுதிக்குள் அடங்கிய) சொற்ப வித்தியாசத்தில் பா ஜெ க ஐந்தில் தோற்றது, இரண்டில் மிக அதிக வித்தியாசத்தில் வென்றது. கூட்டுத்தொகை பாராளுமன்ற தொகுதி வெற்றி ப ஜா க வுக்கே என்பதை அன்றே காட்டியது....
Rate this:
Share this comment
swaminathan - london,யுனைடெட் கிங்டம்
27-ஜூன்-201909:42:38 IST Report Abuse
swaminathanநான் எந்த கட்சியை ஆதரிப்பவன் எதிர்ப்பவன் என்று எப்படி வேண்டுமானாலும் நீங்கள் முடிவு கட்டிக்கொள்ளுங்கள். எனக்குக் கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரை மாறாத விசுவாசம் என்பது பாரத நாட்டிற்குத்தான். ஆனால் கட்சி, தலைவருக்கெல்லாம் பிரச்னையைப் பொறுத்துதான் ஆதரவு எதிர்ப்பு எல்லாம். ஆனால் நீங்கள் எழுதியுள்ள விளக்கப்படி 25 லோக்சபா தொகுதிகளிலும் அதே சமன்பாடு தானா? ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்குள் அடங்கிய ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் ஐந்தில் சொற்ப வித்தியாசத்தில் பா ஜ க தோற்று , இரண்டில் மிக அதிக வித்தியாசத்தில் வென்றதா? உங்கள் வாதம் உங்களுக்கே நகைப்பாக இல்லையா? அதே சமன்பாடு என்றால் சட்டமன்ற தேர்தலில் மொத்த வாக்கு சதவீத்தில் காங்கிரஸ் எப்படி அதிகம் பெற்றது? மிகவும் நேர்மையான அதிகாரியான N கோபாலஸ்வாமி தலைமை ஆணையராக இருந்தபோது நவீன் சாவ்லா ஆணையராக இருந்தார். அப்போது கூட்டத்தின் இடை இடையே சென்று தகவல்களை சோனியாவிற்கு தெரிவிப்பதாக சாவ்லா மீது கோபாலஸ்வாமி குற்றம் சாட்டினார். அப்படிப்பட்ட நவீன் சாவ்லா தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது நடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் உ பி யில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 21 தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும் எனக்கு இந்த சந்தேகம் எழுந்தது. கடந்த பல பத்தாண்டுகளாக காங்கிரஸ் உபியில் படுத்து கிடக்கிறது. மொத்த 80 இல் ஓரிரு தொகுதி அல்லது அதிக பட்சம் 5 தொகுதிகள் என்றே இருந்த காங்கிரஸ் திடீரென 21 என்பது இன்றும் நம்பும்படியாக இல்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 39 இல் 15 இல் வெற்றி பெற்றால் நாம் நம்புவோமா ? அது போலத்தான். மின்னணு இயந்திர வாக்குப் பதிவில் மோசடி என்பது சாத்தியமே என்றுதான் தோன்றுகிறது. ஒரு நாள் பிரேக்கிங் நியூஸ் - evm மோசடி அம்பலம் என்று வந்தால் ஆச்சிரியப்படுவதிற்கில்லை....
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201911:19:59 IST Report Abuse
uthappaகனவு காணுங்கள். உங்கள் வாழ்நாளில் அப்படி ஒரு செய்தி காங்கிரஸ் மறுபடியும் ஆட்சிக்கு வந்தாலும் முடியாது. நீங்கள் நினைப்பதைத்தான் இந்த இந்தியா முழுதும் நினைக்கிறார்கள் என்று நினைப்பதே தவறு.அவர்கள் எல்லா கட்சிகளின் தலைவர்கள் பேசுவதையும் கேட்கிறார்கள்.இந்தி தெரிந்தவர்கள்.நாம் நமக்கு வேண்டாத கட்சி தலைவனை பார்த்ததும் "சே" என்று சொல்லி ஒதுங்கி கொள்கிறோம்.நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு.நமக்கு ஒன்றுதான் அதிகமாக கான்புக்க பட்டது.மதவெறி, ஜாதி வெறி, மொழி வெறி நம்மை அவர்களிடம் இருந்து வேறு படுத்தி இருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X