பதிவு செய்த நாள் :
ஆதரவு!
இந்தியாவுக்கு,சீனா,பாக்.,உட்பட 55 நாடுகள்...:  
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவி

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லா உறுப்பினர் பதவிக்கு, இந்தியாவை தேர்ந்தெடுக்க, சீனா, பாகிஸ்தான் உட்பட, ஆசிய - பசிபிக் பிராந்தியத் தைச் சேர்ந்த, 55 நாடுகள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன. 2021 மற்றும் 2022 என, இரண்டு ஆண்டுகளுக்கானது இந்தப் பதவி.

இந்தியா, சீனா, பாக்., ஆதரவு,  ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், உறுப்பினர், பதவிஐக்கிய நாடுகள் சபையின் உயரிய அமைப்பான, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், தற்போது, 15 நாடுகள் இடம் பெற்றுள்ளன. சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய, ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இதைத் தவிர, 10 நிரந்தரமல்லா உறுப்பு நாடுகளும் உள்ளன.இந்த நிரந்தரமல்லா உறுப்பினர் பதவி, இரண்டு ஆண்டுகளுக் கானது. ஒவ்வொரு ஆண்டும், ஐந்து நாடுகள், இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும்.


அதன்படி, 2020 ஜனவரியில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கான நிரந்தரமல்லா

உறுப்பினர்கள் தேர்வு சமீபத்தில் நடந்தது. அதில், எஸ்தோனியா, நைஜர், செயின்ட் வின்சன்ட், கிரனாடைன்ஸ், துனீஷியா, வியட்னாம் ஆகியவை தேர்ந்தெடுக்கப் பட்டன.

உறுப்பினர்கள் தேர்வு
வரும், 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான, ஐந்து நிரந்தரமல்லா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்க உள்ளது. இந்த, 10 நிரந்தரமல்லா உறுப்பு நாடுகள், அவை அமைந்துள்ள பிராந்தியத்தின் அடிப்படை யில் தேர்வு செய்யப்படும்.


ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு, ஐந்து; கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, ஒன்று; லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு, இரண்டு; மேற்கு ஐரோப்பிய நாடு களுக்கு, இரண்டு என, ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.இந்நிலையில், ஐ.நா., வின், ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகளின் குழு கூட்டம், நியூயார்க்கில் நேற்று நடந்தது. இதில், 2021மற்றும் 2022ம் ஆண்டுக்கான, நிரந்தரமல்லா உறுப்பினர் பதவிக்கு, இந்தியாவின் பெயரை பரிந்துரைக்க, குழுவில் உள்ள, 55 நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.


இதை, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர

Advertisement

துாதர், சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். 'சீனா, பாகிஸ்தான் உட்பட, குழுவில் உள்ள, 55 நாடுகளும் முழு ஆதரவு அளித்துள்ளன' என, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், அக்பருதீன் கூறியுள்ளார். இந்தியா இதற்கு முன், 1950 - 1951, 1967 - 1968, 1972 - 1973, 1977 - 1978, 1984 - 1985, 1991 - 1992 மற்றும் 2011 - 2012ல் நிரந்தரமல்லா உறுப்பினராக இருந்துள்ளது.


'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மாற்றி அமைக்க வேண்டும்; எங்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும்' என, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு, மத்திய அரசு கொள்கை அளவில் அதிமுக்கியத் துவம் அளித்து,பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக, லோக்சபா வில் நேற்று, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
27-ஜூன்-201912:04:04 IST Report Abuse

ரத்தினம்நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டுமென்றால் கிட்டத்தட்ட குதிரை கொம்பு தான். நமக்கு வீடோ பவரை கொடுக்க பெரும்பாலான உலக நாடுகள் ஒத்துக்கொள்ளாது. ஏற்கனவே வானளாவிய அதிகாரம் பெற்றுள்ள ஐந்து நாடுகளும் ஒருமித்து சம்மதிக்கணும். அமெரிக்க காரன் சரின்னா சீனாக்காரன் மாட்டான், சீனாக்காரன் சரின்னா அமெரிக்கா காரன் மாட்டான். ஏற்கனவே ஜப்பான், பிரேசில், தென் ஆப்பிரிக்க போன்ற நாடுகள் இந்தியாவோட இணைந்து புது குழு அமைத்து நிரந்தர உறுப்பினர் ஆக முயற்சித்ததா படித்த நினைவு.. இதற்கு கடுமையான முயற்சி தேவை. அதனால் தான் 1960களில் எளிதாக வந்த வாய்ப்பை, உதாசீனம் செய்து இந்தியாவை கீழே தள்ளிய நேருவின் மேல் அரசியல் வல்லுநர்கள் வெறுப்பாக இருக்கிறார்கள்.

Rate this:
Suresh - chennai,இந்தியா
27-ஜூன்-201908:20:39 IST Report Abuse

Sureshநிரந்தரமில்லாத பதவிக்கு சீனா ஆதரவு கொடுக்கிறதில என்ன இருக்கு? நிரந்தர பதவிக்கு கொடுக்க சொல்லுங்க பாப்போம். மோடியும் உலகத்தை சுத்தி சுத்தி வந்துக்கிட்டுதான் இருக்கார். வாட் இஸ் தி யூஸ்?

Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201920:52:38 IST Report Abuse

sankarஅவரு உலகத்தை சுத்தி சுத்தி முதலீடுகளை இந்தியா கொண்டு வருகிறார் . அதை சொல்லி தேர்தலை ஜெயித்தார் . பல இந்திய களவாணிகள் (திமுக காங் )முழுதும் இந்திய பணத்தை உலகம் முழுதும் சென்று பதுக்குகிறார்கள் ...

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
27-ஜூன்-201905:49:48 IST Report Abuse

Darmavanஇந்த நாட்டை குட்டிச்சுவராக்கியது நேரு/காந்தி தமிழ் நாட்டைக் குட்டிச்சுவராக்கியது கட்டுமரம். இந்த இரண்டு கட்சிகளும் இப்போது ஒன்று சேர்ந்திருக்கிறது. இன்னும் என்ன நடக்குமோ.

Rate this:
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
27-ஜூன்-201911:02:13 IST Report Abuse

D. Selestine Arputharajஅறிவு என்பது இல்லாமல் பேசும் உன்னை மாதிரி மாக்கள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது ....எதுக்கு எடுத்தாலும் நேரு இந்திரா ராஜிவ் ராகுல் கட்டுமரம் இப்படியே பேசிட்டு இருங்க ....நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று சிந்தி ....... ...

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X