பதிவு செய்த நாள் :
'தலைவராக தொடருங்கள்'
கெஞ்சும் எம்.பி.,க்கள் நழுவும் ராகுல்

புதுடில்லி: ''காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில், மாற்றம் எதுவும் இல்லை. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, இது இடமல்ல,'' என, நேற்று நடைபெற்ற எம்.பி.,க்கள் கூட்டத்தில், அக்கட்சி தலைவர் ராகுல் தெரிவித்தார்.

தலைவராக தொடருங்கள், எம்.பி., ராகுல்


சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்., படுதோல்வி அடைந்தது. தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில், 52 இடங்களில் மட்டுமே, காங்., வெற்றி பெற்றது. உ.பி.,யின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட, அக்கட்சி தலைவர் ராகுல்,பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் படு தோல்வி அடைந்தார்.

காங்.,கின் படுதோல்விக்கு முழு பொறுப்பேற்று, தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ராகுல்அறிவித்தார்.

கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க துவங்கினார். இது தொடர்பாக, அவரை சந்தித்து பேச சென்ற தலைவர்களை,அவர் சந்திக்க மறுத்தார். அடுத்து, லோக்சபாவின், காங்., தலைவர் பதவியை ஏற்கவும், ராகுல் மறுத்து விட்டார். இதையடுத்து, காங்.,கில், குழப்பமான சூழல் நிலவி வருகிறது.


இதற்கிடையே, விரைவில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களை சேர்ந்த, காங்., தலைவர்களை, ராகுல் சந்திக்க உள்ளதாக, நேற்றுமுன் தினம் தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டுவிட்டதாக, தொண்டர் கள் உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில், ஐ.மு., கூட்டணி தலைவர், சோனியா தலைமையில், காங்., - எம்.பி.,க்கள் கூட்டம், டில்லியில் நடந்தது. இதில் பங்கேற்ற, எம்.பி.,க்கள், 'தலைவராக ராகுல்

Advertisement

தொடர வேண்டும்' என்ற வாசகம்அடங்கிய பதாகைகளை, கையில் ஏந்தியபடி இருந்தனர்.

'ராகுல் தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்' என, சசி தரூர் உள்ளிட்ட மூத்த, எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தனர்.அதை நிராகரித்த ராகுல், ''ஏற்கனவே என் முடிவை, செயற்குழுவிடம் தெரிவித்துவிட்டேன். இந்த விவகாரம் குறித்து பேச, இது இடமல்ல,'' என, தெரிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-ஜூன்-201920:13:09 IST Report Abuse

Natarajan Ramanathanஇன்றைய நிலையில் கான்கிராஸ்...க்கு சைகோதான் தலைவராக வரவேண்டும்.

Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
27-ஜூன்-201915:32:34 IST Report Abuse

Nallavan Nallavanதிரும்ப ரபேல் -ன்னு கூவிப்பாரேன் பப்பு ......

Rate this:
Rajan - Chennai,இந்தியா
27-ஜூன்-201914:25:17 IST Report Abuse

Rajanசூசை : நீஙக எப்படியோ நாசமா போங்க, என்ன எப்போ ஜனாதிபதி ஆக்குவீங்க 🥵🤔

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X