பதிவு செய்த நாள் :
வயநாடு, ரேபரேலியில் இந்தியா தோற்றதா
காங்., மீது மோடி மீண்டும் தாக்கு

புதுடில்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த, காங்., தலைவர் ராகுல், 'இந்தியா தோல்வி அடைந்து விட்டது' என, கூறியிருந்தார். லோக்சபாவில், நேற்று முன்தினம் காங்.,கை கடுமையாக விமர்சித்த, பிரதமர், நரேந்திர மோடி, ராஜ்யசபாவிலும் நேற்று கடுமையாக தாக்கினார்.

வயநாடு,ரேபரேலி,இந்தியா தோற்றதா,காங்., மோடி, தாக்கு
'வயநாடு, ரேபரேலியிலும் இந்தியா தோல்வி யடைந்து விட்டதா' என, அவர் கேள்வி எழுப்பி னார்.பார்லி., கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி, ராம்நாத்கோவிந்த் உரையாற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, நேற்று முன்தினம், லோக்சபாவில் விவாதம் நடந்தது. அப்போது, காங்., கட்சியை, பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.


வென்றது எப்படி?
இந்நிலையில், நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, ராஜ்சபாவில்விவாதம் நடந்தது.அப்போது, பிரதமர் மோடி பேசிய தாவது:லோக்சபா தேர்தலில், பா.ஜ., வுக்கு பெரும் வெற்றி கிடைத்தது, நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த மிக பெரிய தோல்வி என, காங்., கூறியுள்ளது. அரசு வழங்கும், 2,000 ரூபாய்க் காக, விவசாயிகள் தங்களை விற்று விட்டதாகவும் கூறினர்.எந்த விவசாயியும் தங்களை விற்கவில்லை. நாட்டில் உள்ள, 15 கோடி விவசாயிகளை, காங்., அவமதித்துள்ளது. அதேபோல், ஊடகங்களை நாங்கள் விலைக்கு வாங்கியதாக கூறி உள்ள

னர்.அப்படியானால், கேரளா, தமிழகத்தில் நீங்கள் வென்றது எப்படி?தங்களுடைய தோல்வியை ஏற்க, காங்., மறுக்கிறது.ஓட்டு வங்கிக்காக நாங்கள் செயல்படவில்லை. அப்படியென்றால், அசாமில், நாங்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்தியிருக்க மாட்டோம்.நாங்கள், நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுகிறோம்.லோக்சபா தேர்தலில், பா.ஜ., வென்றது, ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் கிடைத்த தோல்வி என்று கூறியுள்ளனர். அப்படியானால், காங்.,தலைவர் ராகுல்,கேரளாவின் வயநாடு மற்றும் மூத்த தலைவர், சோனியா உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் வென்றதும், நாட்டுக்கு கிடைத்த தோல்வியா?ராஜ்யசபா என்பது, நாட்டின் கூட்டாட்சி தத்து வத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இங்கு எங்களுக்கு போதிய, எம்.பி.,க்கள் இல்லை. ஆனால், லோக்சபா தேர்தலில், பெரும்பாலான மாநிலங்களில், மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதை உணர்ந்து, இங்கு செயல்பட வேண்டும்.


புதிய இந்தியா
ராஜ்யசபாவில், முக்கியமான, 22 மசோதாக்கள் காலாவதியாகின. அவை மீண்டும் தாக்கல் செய்யப்படும்போது, நிறைவேற்ற உதவிட வேண்டும். லோக்சபா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை, இங்கு மதிக்க வேண்டும்.'புதிய இந்தியா வேண்டாம். எங்களுக்கு பழைய இந்தியாவையே கொடுங்கள்' என, காங்.,கைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.ஊழல்கள் நிறைந்த, பிரிவினைவாத அமைப்பு களுக்கு ஆதரவு தருகிற, ரயில் டிக்கெட் வாங்கக் கூட இடைத் தரகர் இருக்கிற, 'காஸ்' இணைப்பு பெற, எம்.பி.,யின் பரிந்துரை தேவை இருக்கிற பழைய இந்தியாவையா நீங்கள் விரும்புகிறீர்கள். மக்கள் மாறி விட்டனர். புதிய இந்தியா கண்டிப்பாக அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.அதைத் தொடர்ந்து, குரல் ஓட்டெடுப்பின் மூலம்,

Advertisement

ஜனாதிபதி யின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது. தான் கொண்டு வந்த, 200க்கும் மேற்பட்ட திருத்தங்களை, காங்., திரும்ப பெற்றுக் கொண்டது. கம்யூ., கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக் கப்பட்டன.இந்த தீர்மானம், லோக்சபாவில் நேற்று முன்தினமே நிறைவேறியது. தற்போது, ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


வலியை ஏற்படுத்தியுள்ளது
ராஜ்யசபாவில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது:பா.ஜ., ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், முஸ்லிம் இளைஞர் ஒருவர், அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம், எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற வன்முறை கள் எங்கும் நடக்கக் கூடாது.


ஆனால், இந்த சம்பவத்துக்காக மாநில அரசை எப்படி குறை கூறலாம். ஜார்க்கண்ட் அல்லது மேற்கு வங்கம் அல்லது கேரளாவில் எங்கு வன்முறை நடந்தாலும், அதை சட்ட ரீதியா கவே எதிர்கொள்ள வேண்டும்.முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ள பீஹாரில், மூளை காய்ச்சல் நோயால்,130க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளது, மனதை பிழிவதாக உள்ளது.


கடந்த, 70 ஆண்டுகளாக இந்த நோயைக் கட்டுப் படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது, மிகப் பெரிய தோல்வியே; நமக்கெல்லாம் அவமானம்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
04-ஜூலை-201907:35:15 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>அர்ச்சகர் திருடவே இல்லீங்க இது சத்தியம் அவர் மிகவும் தூய்மையானவர் என்பது சீக்கிரமே வெளியே வரும்

Rate this:
spr - chennai,இந்தியா
04-ஜூலை-201901:17:16 IST Report Abuse

sprஇந்த ராஜ்ய சபையில் அனைவருமே நியமன உறுப்பினர்கள் என்பதால் அவர்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க மாட்டார்கள் மக்களால் மறுக்கப்பட்ட கட்சிகள் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடைக்கல்லாகவே இருக்கும் எனவே தமிழகத்தில் எம்ஜியார் செய்தது போல ராஜ்ய சபையைக் கலைத்து விடலாம் "தான் கொண்டு வந்த, 200க்கும் மேற்பட்ட திருத்தங்களை, காங்., திரும்ப பெற்றுக் கொண்டது. " தங்கள் வாதம் நியாயமான ஒன்றானால், ஏன் திரும்பப் பெற்றார்

Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
04-ஜூலை-201910:07:57 IST Report Abuse

madhavan rajanஅவர்கள் அங்கு திரும்பப் பெற்று விடுவார்கள். வெளியே வந்து அவைகளையே பேசி அரசை குறை கூறுவார்கள். அதுதான் காங்கிரஸ் ஸ்டைல். வெளியே நாங்கள் இதை எதிர்க்கிறோம் அதை எதிர்க்கிறோம் என்று ஓலமிடுவார்கள். பாராளுமன்றத் கூட்டங்களில் ஒப்புக்காக குரல் கொடுத்துவிட்டு ஆதரித்து ஒட்டு போட்டுவிடுவார்கள். என்னே சிறந்த ஆளுமை உடைய கட்சி. புல்லரிக்குது. ...

Rate this:
Mal - Madurai,இந்தியா
27-ஜூன்-201918:22:03 IST Report Abuse

MalWhen a muslim thief is attacked he finds support in parliament but even when a peaceful Hindu is brutally murdered , there is not even a single celebrity to condemn this .. Hindus should wake up before it's too late... We have only India... But Muslims n Christians have a lot of countries to support their faith and their people...

Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
30-ஜூன்-201922:29:46 IST Report Abuse

Amal Anandanஆனா எட்டு கிலோ கோவில் நகையை கொள்ளை அடித்த அர்ச்சகர் பத்தி வாயே திறக்க மாட்டீங்க. நாளா இருக்கு உங்க நியாயம். ...

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
01-ஜூலை-201907:26:26 IST Report Abuse

Darmavanஒரே ஒரு சமாச்சாரத்தை வைத்து மூர்க்கங்கள்/பாவாடை செய்யும் அட்டூழியங்களை மறக்கணுமா.அறிவோடு பேசவேண்டும் ...

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X