அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.பி., 'சீட்': தி.மு.க.,வில் புகைச்சல்

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (28)
Advertisement
எம்.பி., 'சீட்': தி.மு.க.,வில் புகைச்சல்

சென்னை , தி.மு.க.வில் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை கூட்ட அக்கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.அடுத்த மாதம் 18ல் தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகளுக்கு தலா மூன்று எம்.பி. பதவிகள் கிடைக்கும்.தி.மு.க.விற்கு கிடைக்கக் கூடிய மூன்று பதவிகளில் ஒன்று ம.தி.மு.க.வுக்கு தரப்பட உள்ளது. மற்ற இரண்டையும் வழக்கறிஞர் வில்சன் தொழிற்சங்க பேரவை தலைவர் சண்முகம் ஆகியோருக்கு வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கறிஞர் வில்சனை விட வழக்கறிஞர் அணியில் மூத்த நிர்வாகிகளாக சிலர் உள்ளனர். அதே போல் கட்சியிலும் மூத்த நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்களும் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு காத்திருப்பதால் கட்சியில் புகைச்சல்கிளம்பியுள்ளது.




இதற்கிடையே காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தருமாறு கத்தோலிக்க பிஷப்கள் சிலர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் பரிந்துரை செய்துள்ளனர். யாருக்கு எம்.பி. பதவி வழங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதனால் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவை கூட்ட ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
27-ஜூன்-201914:05:30 IST Report Abuse
Subramanian Sundararaman பீட்டர் அல்போன்ஸ் ஒரு நல்ல parliamentarian . மீதியை மதம் மாறிய வைகோ , எஸ்ரா சற்குணம் ஆகியவர்களுக்கு கொடுத்தால் முழுமையான மதச் சார்பின்மை கட்சியாக திமுக ஆகிவிடும் . மற்றவர்கள் இலவு காத்த கிளிதான் .
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
27-ஜூன்-201912:42:16 IST Report Abuse
வல்வில் ஓரி து. முருகன் மவனுக்கு கொடுங்கப்பா... நெறையா பணம் இழந்திருக்காப்பா... அப்புறம் இந்தி எல்லாம் தெரியுமாம்.. பாராளுமன்றத்துல கிழி கிழி ன்னு கிழிப்பாராம்... பாராளுமன்றத்துக்கு வாட்டர் சப்ளை ஒப்பந்தம் அருவி வாட்டர் கம்பெனிக்கு வாங்கிருவா .
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
27-ஜூன்-201910:53:28 IST Report Abuse
இடவை கண்ணன் கத்தோலிக்க பிஷப்புகள் டீம்கா தலைவரை சந்தித்து குறிப்பிட்ட ஒருவருக்கு பரிந்துரை செய்தனர் ... டீம்கா செய்வது மத சார்பற்ற அரசியல் …நம்புங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X