அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எதற்காக அவசர சட்டம்? தி.மு.க., திடீர் சந்தேகம்!

'சிறப்பு பொருளாதார மண்டலம் தொடர்பாக, அவசர சட்டம் கொண்டு வருவதன் நோக்கம், மத்திய அரசு மீது, சந்தேகத்தை ஏற்படுத்து கிறது' என, தி.மு.க., குற்றம் சாட்டியுள்ளது.

அவசர சட்டம், தி.மு.க.,சந்தேகம்!



'செஸ்' எனப்படும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், நாடு முழுவதும் அமைக்கப் பட்டு, செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடர்பான சட்டத்தில், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதை அவசர ,

சட்டமாக்கும் மத்திய அரசின் முடிவின் மீது, தி.மு.க., சந்தேகத்தை கிளப்புகிறது.


இந்த அவசர சட்டம் குறித்த விவாதத்தின் போது, தி.மு.க.,வின் தர்மபுரி தொகுதி, எம்.பி.செந்தில் குமார், பங்கேற்றுப் பேசியதாவது:இந்த அவசர சட்டம், அறக்கட்டளைகள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படும் அமைப்புகள் ஆகியவற்றுக்கும், பொருளாதார மண்டலம் அமைக்கும் உரிமையை தரப்போகிறது. அறக்கட்டளை என்பது, லாப நோக்க மற்ற அமைப்பு. ஏற்கனவே, வெளிநாட்டு நிறுவனங் களுக்கு, பொருளாதார மண்டலத்தில், நிறைய சலுகைகள் தரப்படும் நிலையில், அறக்கட்டளை களையும் உள்ளே கொண்டு வருவதன் நோக்கம் புரியவில்லை.


இது ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டத் திருத்தம் அல்ல. இதற்கு, அவசரச்சட்டம் கொண்டு

Advertisement

வர வேண்டிய அவசியமும் இல்லை.மத்திய அரசுக்கு நெருக்கமான யாரோ சிலர், பயன டைய வேண்டுமென்பதற்காக, அறக்கட்டளை களை உள்ளே கொண்டு வரமுயற்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.இதை தவிர்த்து விட்டு, தர்மபுரி போன்ற பின் தங்கிய பகுதி களில், நிறைய பேருக்கு, வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில், புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க வேண்டும்.இவ்வாறு, செந்தில்குமார் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
28-ஜூன்-201903:23:18 IST Report Abuse

 nicolethomsonஎதுக்கு இவ்ளோ AC திமுகவினரே , ஏற்க்கனவே தண்ணீர் தட்டுப்பாடு , இனி காற்று தட்டுப்பாடையும் உருவாக்குவீங்க போல ?

Rate this:
shan - jammu and kashmir,இந்தியா
27-ஜூன்-201921:45:56 IST Report Abuse

shanவெளிநாட்டுக்காரனுக்கு கொடுக்கிற சலுகையை இங்கே உள்ளவன் அதுவும் பொது னால நோக்கம் கொண்ட குழுக்களுக்கு கொடுக்க கூடாது கமிசன் வராது என்று புலம்பும் திமுக காரனை எப்படி திட்டுவது இதுக்கு தானாடா மக்கள் ஒட்டு போட்டார்கள் மக்களை சொல்லணும் மகா திருட்டு கும்மல் என்று தெரிந்தும் ஒட்டு போட்டவனுகளை நல்லா கொட்டாவி விட சொல்லணும்

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-ஜூன்-201920:07:25 IST Report Abuse

Natarajan Ramanathanஇந்த அவசர சட்டத்தை விட விஞ்ஞான ஊழல் செய்து செத்துப்போனவர்களுக்கு சிலைவைக்க தடைசெய்யும் அவசர சட்டம் கொண்டுவந்தால் மிகவும் நல்லது.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X