பதிவு செய்த நாள் :
ஆதாரங்களை ஒளிபரப்ப தி.மு.க., தயாரா?
லோக்சபாவில் அ.தி.மு.க.,விட்டது சவால்

''தமிழகத்தில், தண்ணீர் பிரச்னையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு, என்னிடம் ஆதாரம் உள்ளது. அவற்றை, தங்களது ஊடகங்களில் வெளியிட, தி.மு.க.,வினர் தயாரா,'' என, அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத்குமார் கேள்வி எழுப்பியதால், லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதாரங்கள், தி.மு.க., லோக்சபா, அ.தி.மு.க., சவால்


லோக்சபாவில், நேற்று முன்தினம் பேசிய, தி.மு.க., - எம்.பி., தயாநிதி, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். நேற்று, தி.மு.க., பார்லி மென்ட் கட்சித் தலைவர், டி.ஆர். பாலுவும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை குறித்து பேசினார்.


அதன் விபரம்:கடந்த, 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 'நிடி ஆயோக்' தலைவர், தனது அறிக்கையில், 2030க்குள், தண்ணீர் பிரச்னை பூதாகரமாக வெடிக்கும்; 21 நகரங் களில், ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பர்; லட்சக்கணக்கான மக்கள் தண்ணீரின்றி தவிப்பர் என்றும் அறிக்ககையில் கூறுகிறார்.


வறண்ட ஏரிகள்

தமிழத்தில், தற்போதே நிலைமை மோசமாக உள்ளது.சென்னைக்கு தண்ணீர் தரும், செம்பரம் பாக்கம், பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ் ஆகிய 4 ஏரிகளுமே வறண்டு கிடக்கின்றன. காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை, அமராவதி என மற்ற நீர்நிலை ஆதாரங்களும் வற்றிவிட்டன.எனவே, ரயில்கள் மூலமாக, சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும். 13 கடலோர மாவட்டங் களிலும், கடல்நீர்சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கு, அ.தி.மு.க.,- எம்.பி., ரவீந்திரநாத் குமார், நேற்று பதிலடி தந்தார்.அதன் விபரம் :பருவமழை பொய்த்து, நீர்நிலைகள் வறண்டு விட்டதால்,தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இது, பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னை. ஆனால், எதிரணியினர், பொய்யான தகவல்களை பரப்பி, குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.தண்ணீர் பஞ்சத்தை போக்க, தமிழக அரசு, என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதற்கு, என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. தி.மு.க.,வினர் வசம், 'டிவி' ஊடகங்கள் உள்ளன. இந்த ஆதாரங்களை அவர்களுடைய ஊடகங்களில் ஒளிபரப்ப தயாரா?இவ்வாறு, அவர் பேசினார்.


தவறான தகவல்
இதற்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள், 'ரவீந்திரநாத், சபைக்கு தவறான தகவல்களை தருகிறார்; இதை அனுமதிக்க முடியாது' என, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.கேள்வி நேரத்தின்போது, மத்திய சென்னை, எம்.பி., தயாநிதி, ''கூடங்குளம் அணுக்கழிவுகளை, மக்கள் நடமாட்டம் இல்லாத, பாலைவன பகுதியில் புதைக்க கூடாதா,'' என, கேட்டார்.

அதற்கு, பதிலளித்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ''அணு உலைக்கு சிறிது தொலைவில், 30 மீட்டர் பள்ளத்தில், பாதுகாப்பான முறையில் புதைக்கப்படும். இது வழக்கமான நடைமுறை தான்,'' என்றார்.


கேள்வி நேரம் முடிந்த பின், தமிழக, எம்.பி.,க்கள் பேசியதாவது:

தூத்துக்குடி, எம்.பி., கனிமொழி:


ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில், துப்பாக்கி சூடு நடந்து, ஓராண்டு ஆகிவிட்டது. சி.பி.ஐ., இன்னும் ஒருவரைக் கூட கைது

Advertisement

செய்யவில்லை. பிறகெப்படி, தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என, தூத்துக்குடி மக்கள் நம்புவர்.


ஆரணி, எம்.பி., விஷ்ணுபிரசாத்:


சுற்றுச்சூழல் மாசு பிரச்னையால், ஆரணி பட்டு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் நெசவாளர்களில் பெரும்பாலானோர், தங்கள் உற்பத்தி கூடங்களை மூடி வருகின்ற னர். இங்கு பட்டுப்பூங்கா அமைக்கப்பட்டால், மாசு இல்லாத நீர் வெளியேற வாய்ப்பு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இதன்மூலம், ஆரணிப் பட்டுத் தொழில் காப்பாற்றப்படும்.


கடலூர், எம்.பி., ரமேஷ்:


முந்திரி பருப்பு உற்பத்திக்காக, கடலூரில், ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும். இத் தொழிலுக்கான ஆதாரப்பொருட்களின் வரியை ரத்து செய்ய வேண்டும். முந்திரி பருப்பை, வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும்.


கன்னியாகுமரி, எம்.பி., வசந்தகுமார்:


சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு, ஏராளமான பயணியர் வந்து, போகின்றனர். ஆனால், போதுமான ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகள் இல்லை. நாட்டின் தென்கோடி முனைக்கு, ஹெலிபேட் உட்பட, அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும்.
- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-ஜூன்-201920:10:40 IST Report Abuse

Natarajan Ramanathanதூத்துக்குடி துப்பாக்கி சூடு நடக்க காரணமான கீதாசீவனை கைது செய்து நொங்கெடுத்தால் உண்மை வெளிப்படும்.

Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
27-ஜூன்-201919:57:49 IST Report Abuse

Krishnamurthy Venkatesanதிமுகவினரால் நடத்தப்படும் சாராய ஆலைகளில் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை பூமியிலிருந்த்த்து உறிஞ்சி எடுக்கிறார்களாமே? இதைப்பற்றி உ.பி வாய் திரைப்பதில்லையே? ஏன்?

Rate this:
venkatan - Puducherry,இந்தியா
27-ஜூன்-201919:27:27 IST Report Abuse

venkatanயப்பா..இப்படி பேசி பேசியே அங்கேயும் அரசியல் பண்றீங்க. உங்களுக்கு மினரல் வாட்டர் உட்பட அனைத்து சலுகைகளும் உண்டு..ஆனா நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து எங்களுக்கு குடிக்க குளிக்க துவைக்க தண்ணீர் ஏற்பாடு பண்ணனும்.உங்க அரசியல் யாவாரத்தை தமிழ் நாட்டோட நிறுத்திக்கோங்க. என்ன மக்கள் பிரதிநிதி களே... சனங்களோட தேவைகளையும் உணர்ச்சிகளும் சனநாயகத்தில் மதிக்க ப் பட வேண்டும்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X