பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.340 கோடி தந்தால் தான் தண்ணீர் :
ஆந்திரா அடம்; தமிழகம் தவம்

'தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் என்றால், 340 கோடி ரூபாய் தர வேண்டும்' என, ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி விட்டதால், தமிழக பொதுப்பணித் துறையினர், தண்ணீருக்காக தவம் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர், ஆந்திரா அடம், தமிழகம் தவம்சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டு தோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு வழங்கும் வகையில், இரு மாநிலங் களுக்கு இடையே, 1983ல், ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர், தமிழகத்திற்கு வருவதற்காக, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.


ஒப்பந்த விதி
இந்த நீர், பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்காக, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கால்வாயை, ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை புனரமைத்து தந்த

பின்னரே, தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் எடுத்து வர வழிவகை செய்யப்பட்டது. அதற்கு முன் வரை, தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீர் கிடைப்பதில், சிக்கல் நீடித்து வந்தது. அதனால், கிருஷ்ணா நீர் வரும் கால்வாயை, சாய்கங்கை கால்வாய் என்று, பொதுப்பணிதுறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.சாய்கங்கை கால்வாயின் பராமரிப்பு செலவை, ஆந்திரா - தமிழகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என, ஒப்பந்த விதி உள்ளது. இதற்காக, தமிழக அரசு தரப்பில், ஆந்திர அரசிடம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுஉள்ளது.


சந்திப்பு
கால்வாயில், பல்வேறு பாசன விரிவாக்க பணி களை செய்து, அதற்கும் ஆந்திர அரசு, தமிழகத் திடம் நிதி கேட்டு வருகிறது.இதை காரணம் காட்டி, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது. வரும் ஜூலை முதல், அக்., வரை, 8 டி.எம்.சி., நீரை, ஆந்திர அரசு வழங்க வேண்டும்.இந்தநீர் கிடைத் தால், வறட்சியில் தவிக்கும், சென்னையின் குடிநீர் தேவையை, எளிதாக சமாளிக்க முடியும். எனவே, தண்ணீரை பெறுவதற்காக, ஆந்திர அதிகாரிகளை, சமீபத்தில், தமிழக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் குழு சந்தித்து பேசியது.
கால்வாய் பராமரிப்பு கட்டணமாக, 25 கோடி ரூபாயை வழங்குவதாக, தமிழக அரசு தரப்பில்

Advertisement

உறுதியளிக்கப்பட்டது.இது குறித்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் அனில்குமார் ஆகியோ ரிடம் தெரிவிப்பதாக, ஆந்திர அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, தமிழக அதிகாரிகள், சென்னை திரும்பினர். ஆனாலும், ஆந்திர அதிகாரிகளிடம், தொடர்ந்து பேசி வந்தனர்.தற்போது, 'கால்வாய் பராமரிப்பு கட்டணமாக, 340 கோடி ரூபாயை வழங்கினால் மட்டுமே, ஜூலையில் தண்ணீர் திறக்க முடியும்' என, ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். கால்வாய் பராமரிப்பு செலவிற்கான கணக்கு விபரங்களை தரவும், ஆந்திர அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
03-ஜூலை-201901:49:10 IST Report Abuse

jaganவரும் காலத்தில், தமிழ் நாடு ஆண்டு ஒன்றுக்கு 1000 கோடிக்கு மேல் குடுக்க வேண்டிய நிலை வரும்...அவன் ஏன் இலவசமாய் தரவேண்டும்...ஜோலார்பேட்டை தண்ணி சென்னைக்கு தரமாட்டேன் என்று துரைமுருகன் போராடுகிறார்

Rate this:
Murugan - Bangalore,இந்தியா
30-ஜூன்-201919:12:13 IST Report Abuse

Muruganசரியான சுயநலவாதிகள் தெலுங்கர்கள் என்று மீண்டும் நிரூபித்து உள்ளனர் . இத்தனை தண்ணீர் பஞ்சத்திலும் தண்ணீர் கொடுக்க பணம் ? மனச்சாட்சி இல்லாமல் ?

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-201900:49:56 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்ஏண்டா நீ ஏரியை கொள்ளையடிச்சி, வர்ற மழை தண்ணியை சேமிச்சு வெக்க துப்பில்லாமே, தூர் வார்ரேன்னு சொல்லி கொள்ளையடிச்சி கொழுத்து போயி கெடப்பே.. மழை தண்ணி, காவிரி தண்ணி கடலிலே போயி வீணா போகும்.. ஒனக்கு தண்ணி வேணும்ன்னா கடல் முழுக்க தண்ணி இருக்கு இருக்கு. மொண்டு குடி, குளி, சாவு.. அவுங்களை திட்ட ஒனக்கு என்ன தகுதி இருக்கு? ...

Rate this:
venkatesaperumal - sivakasi,இந்தியா
28-ஜூன்-201908:52:16 IST Report Abuse

venkatesaperumalஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செயல்பாடு முதிர்ச்சியின்மையும் , அரசியல் சுயநலம் மட்டுமே காணப்படுகிறது , திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு கிறித்துவர் சுப்பாரெட்டியை பலர் எதிர்ப்பு தெரிவித்த போதும் தலைக்கனத்துடன் தனது மாமா என்பதால் நியமித்தார் , பலகோடி செலவில் கட்டிய மக்கள் அரங்கை முன்னாள் சந்திரபாபு நாயுடு காட்டியதற்காக காழ்ப்புணர்ச்சியுடன் சட்டவிரோதமான காட்டி இடித்து மக்கள் வரிப்பணத்தை வீரியம் செய்துள்ளார் , விசாக சாரதா பீட சங்கராச்சாரியார் ஆரத்தழுவும் அளவிற்கு இவர் நீதிமானாக நடந்துகொள்ளவில்லை என்பதற்கு சாய்கங்கைக்கு 340 கோடி பேரம் சாட்சி

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-201900:51:04 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மோடியோட உற்ற நண்பராக்கும். ...

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X