பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அனுமதி, ஏரி, குளங்கள், தனியார், தூர் வாரலாம்

சென்னை: தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது நலனில் ஆர்வமிக்க பொது மக்களுக்கு, ஒரு நல்ல செய்தி. உங்கள் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை துார்வார, இனிமேல் எந்த அதிகாரியும் தடை போட முடியாது. ஏரி, குளங்களை துார்வார, தனியாருக்கு அனுமதி வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணியில் களமிறங்க முன்வரும் அமைப்புகளுக்கும், மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், முதல்வர், இ.பி.எஸ்., அறிவுரை வழங்கி உள்ளார்.அரசு தரப்பில், இதற்கு தேவையான உதவிகளை செய்யும்படியும், அவர் கூறியுள்ளார்.
இரு ஆண்டுகளாக பருவ மழை ஏமாற்றியதால், தமிழகம் முழுவதும், தண்ணீர் பஞ்சம்ஏற்பட்டு உள்ளது.அதிலும், சென்னை மாநகர மக்கள், குடிப்பதற்கும், குளிப்பதற்கும், குடங்களை சுமந்த படி அலைய வேண்டிய அவல நிலை உருவானது.இதற்கான தற்காலிக ஏற்பாடாக, அரசு நிர்வாகம்,ஆங்காங்கே கிடைத்த நீர் ஆதாரத்தை பயன்படுத்தி, லாரிகளில் வினியோகம் செய்யும் வேலையை தான் கவனித்தது.

தண்ணீர் பிரச்னைக்கு, இது நிரந்தர தீர்வாகாது. அடுத்த மழை வருவதற்குள், ஆங்காங்கே, அடையாளத்தை இழந்து கிடக் கும், ஏரி, குளங்களை துார் வாரி ஆழப்படுத்தி, தண்ணீரை சேமிக்கும் வகையில், அவற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை, மக்களிடத்தில், நம் நாளிதழ் விதைத்தது.இதற்காகவே, நம் நாளிதழில் உருவாக்கப் பட்ட,'களமிறங்குவோம்... நமக்கு நாமே' என்ற, அறிவிப்பின் வாயிலாக, இதுவரை தமிழகம் சந்தித்திராத விதத்தில், ஏரி, குளங்களில், கூட்டம் கூட்ட மாக, மக்கள் களமிறங்கி வருகின்றனர்.

கையில் கிடைத்த உபகரணங்களையும், தன்னலமற்றவர்கள் தந்த பணத்தையும் பயன்படுத்தி, ஏரி, குளங்கள், இப்போது சுத்தமாகி வருகின்றன.மக்களின் இந்தஅர்ப்பணிப்புக்கு இடையூறாக, சில அரசு நடைமுறைகளும், அதிகாரிகளும் இருப்பதாக, சமூக அமைப்புகள் குற்றம் சாட்டின. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற்ற பிறகே, குளத்தில்

கால் வைக்க முடியும் என்ற கட்டாய விதிகள், தடையாக இருப்பதையும், அவர்கள்சுட்டிக்காட்டினர்.

அது பற்றிய செய்திகளையும், நமது நாளிதழ் தொடர்ந்து வௌியிட்டதன் விளைவாக, இப்போது, அரசாங்கம் இறங்கி வந்துள்ளது. தடையாக இருந்த, அனைத்து விதிகளையும், மூட்டை கட்டி வைத்து விட்டு, ஏரி, குளங்களை துார் வார, தனியாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இதற்காகவே, சென்னை, தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை திட்ட செயலாக்கம் குறித்த, ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

அதை துவக்கி வைத்து, முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:பருவ காலங்களில் பொழியும் மழையில், ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருப்பதற்காக, தடுப்பணைகள் கட்டுதல், ஏரிகள், குளங்களை துார் வாருதல் போன்ற பணிகள், குடிமராமத்து திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படுகின்றன. இப்பணிகளை முழுக்க முழுக்க, விவசாயிகள் செய்கின்றனர். முதல் கட்டமாக, சோதனை அடிப்படையில், 2017 - 18ம் ஆண்டு, 1,511 ஏரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில், 1,311 ஏரிகள் துார் வாரப்பட்டுள்ளன.

அரசு தயார்


மீதமுள்ள ஏரிகளையும் துார் வார, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், தனியார் நிறுவனங்கள், தாமாக முன்வந்து,அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் ஏரிகள், குளங்களை துார் வார முன்வந்தால், அனுமதி வழங்க, அரசு

தயாராக உள்ளது. இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கு, தௌிவான உத்தரவை வழங்கி உள்ளோம்.

அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர்களிடம், அனுமதி பெற்று, அப்பணிகளை மேற்கொள்ளலாம். குடிமராமத்து திட்டத்தின் கீழ், 2018 - 19ல், 31 மாவட்டங்களில், 1,829 பணிகளுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது; அதை துரிதமாக முடிக்க வேண்டும்.உலக வங்கி நிதியுதவியுடன், 22 மாவட்டங்களில், 1,325 ஏரிகள் மற்றும், 107 அணைக்கட்டுகளை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.

நடப்பாண்டு, இரண்டாம் கட்டமாக, 18 மாவட்டங்களில், 906 ஏரிகள், 183 அணைக்கட்டுகள் புனரமைப்பு பணிக்கு, மதிப்பீடு தயாரிக்கப் படுகிறது. இதை துரிதப்படுத்தி, விரைவாக ஒப்புதல் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்கும். கடலுார், நாகப்பட்டினம் மாவட்டம், ஆதனுார், குமாரமங்கலம் கிராமங்களில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, புதிய தலை மதகுகளுடன் கூடிய கதவணை, ஜெயலலிதா காலத்தில் அறிவிக்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்த தாமதமானதால், அப்பணியை நிறைவேற்ற, தாமதம் ஏற்பட்டுள்ளது. அதை விரைவாக செயல்படுத்த, 428 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணி துவங்கி உள்ளது. திருச்சி முக்கொம்பிலும் கதவணை கட்டும் பணி, 387 கோடி ரூபாயில் துவக்கப்பட்டுள்ளது.மழை நீரை தேக்கி வைக்க, 1,000 கோடி ரூபாயில், நதிகள், ஓடைகள் இடையே, பல்வேறு இடங்களில், தடுப்பணைகள் கட்டப் படும் என, சட்டசபையில்,

பொதுப்பணித் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 56 பணிகள் துவக்கப்பட்டு, 17 பணிகள் நிறைவடைந்துள்ளன. மற்ற பணிகள் நடந்து வருகின்றன. அங்கிருக்கும் வண்டல் மண்ணை, விவசாயிகள், நஞ்சை நிலமாக இருந்தால், ஏக்கருக்கு, 25 டிராக்டர்; புஞ்சை நிலமாக இருந்தால், ஏக்கருக்கு, 30 டிராக்டர் அள்ளிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மண் பாண்டம் செய்பவர்களாக இருந்தால், 10 முதல், 20 டிராக்டர் அளவிற்கு, தாசில்தாரிடம் அனுமதி பெற்று அள்ளிக் கொள்ளலாம்.

சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில், புதிதாக நீர்தேக்கம் கட்டும் பணி, 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள், இரண்டு மாதங்களில் முடிக்கப்படும்.

நடவடிக்கை


தமிழகத்தில் உள்ள, ஆறுகளை இணைக்கும் திட்டத்தில், பெண்ணையாறு - செய்யாறு; பெண்ணையாறு - பாலாறு; காவிரி - சரபங்கா - அய்யாறு; காவிரி - அக்னியாறு - தெற்கு வௌ்ளாறு - மணிமுத்தாறு - வைகை - குண்டாறு; தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிகள் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.இவற்றை விரைவாக முடிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மழை நீர் வீணாக கடலில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்து, அங்கு தடுப்பணை கட்டி, மக்களுக்கு சீராக தண்ணீர் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம், அரசின் லட்சிய திட்டம். இதை நிறைவேற்றும்போது, டெல்டா பாசன விவசாயி களுக்கு, முழுமையாக நீர் கிடைக்க, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும். மழை நீர் திட்டத்தை, முழுமையாக நடைமுறைப் படுத்த, பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த திட்டம் குறித்து, மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Chandrasekaran - Chennai,இந்தியா
29-ஜூன்-201922:04:20 IST Report Abuse

P. Chandrasekaranமக்களை தூர்வார அரசு அனுமதித்தது மிக நல்ல விஷயம். அரசு உடனடியாக அந்த மாதிரி ஏரி குளங்களை சர்வே செய்து அதனுடைய எல்லையை கணித்து எல்லை கற்கள் பதிக்க வேண்டும். அங்கு இருக்கும் ஆக்கிரமிப்புகளை இப்பொழுது எடுக்க வேண்டாம். மக்கள் எல்லோருக்கும் அந்த குளத்தின் எல்லை எவ்வளவு எவ்வளவு பெரிய குளம் என்பது தெரிய வேண்டும். அதே சமயம் எவ்வளவு தூரம் ஆக்கிரமிப்பாளர்கள் ஏரி குளங்களுக்கு சென்றிருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும். பின்னர் அரசு ஆணை நீதிமன்ற ஆனைகளின் படி அந்த ஆக்கிரமிப்பாளர்களை அரசாங்கம் அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பை எடுத்த பின்னர் ஏரி குளங்களை முழுவதுமாக தூர்வாரி அவற்றின் நீர் கொள் அளவை அதிகரிக்க வேண்டும்.

Rate this:
27-ஜூன்-201920:17:34 IST Report Abuse

தமிழ்செல்வம்தனியார் தூர் வாருரப்ப அவன மெரட்டிபுட்டு சொடலையும் சைமனும் நாங்க தான் செஞ்சோம்ன்னு வந்து ஒக்காந்துக்கப் போராணுக.

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜூன்-201918:06:51 IST Report Abuse

Lion Drsekarமின்சாரம், குடிநீர் போன்ற மக்கள் வரி கட்டும் துறையினர் மக்களுக்கு சரிவர பணியாற்ற முடியாமல் போனால், தனியார் கம்பெனிகளைப்போல் லட்சம் கோடி சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் பிரநிதிகள் எந்த எந்த மாதங்களில் பயனீட்டாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வில்லையென்றால் சம்பளம் கட் அல்லது சம்பளத்தைகை குறைக்கும் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே கழை நீரை சேமிப்பார்கள், இன்று அனைவருமே அரசு வேலை , அமைச்சர் பதவி என்று அழிவதற்கு காரணமே, நாடு எப்படி போனாலும் இவர்களுக்கு சம்பளம், வசதிகள், பென்சன் கிடைப்பதால் கம்பெனியைப் போலவே வேலைசெய்தால் மட்டுமே சம்பளம் என்ற நிலையை என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள் மக்களுக்கு , மற்றும் வாங்கும் சம்பளத்துக்கு பரப்புவார்கள், தற்போது சர்வாதிகாரப்போக்கு தான் இருக்கிறது, வரியையும் கட்டிவிட்டு இவர்கள் முன் கைகட்டி , வாய்பொத்தி, உட்கார நாற்காலி கூட கொடுக்காத இவர்களிடம் தினம் தினம் கெஞ்சவேண்டிய ஒரு நிலை மாறும், வந்தே மாதரம்

Rate this:
மேலும் 57 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X