பாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

பர்மிங்காம்: நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் பாபர் ஆஸம் சதம் கடந்து கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



latest tamil news



இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. மழையால் போட்டி, ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


அப்ரிதி அசத்தல்:


நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (5) ஏமாற்றினார். ஷஹீன் அப்ரிதி 'வேகத்தில்' கோலின் முன்ரோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லதாம் (1) வெளியேறினர். நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுக்கு 46 ரன் எடுத்து திணறியது. ஷதாப் கான் 'சுழலில்' வில்லியம்சன் (41) சிக்கினார்.


latest tamil news



பின் இணைந்த பின் இணைந்த ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்து அரைசதம் கடந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்த போது கிராண்ட்ஹோம் (64) 'ரன்-அவுட்' ஆனார். நியூசிலாந்து அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்தது. நீஷம் (97), சான்ட்னர் (5) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிதி 3 விக்கெட் வீழ்த்தினார்.


latest tamil news




பாபர் அபாரம்:


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் (9), இமாம் உல் ஹக் (19) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. முகமது ஹபீஸ் (32) ஓரளவு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய ஹாரிஸ் சோகைல், அரைசதமடித்தார்.


latest tamil news


அபாரமாக ஆடிய பாபர் ஆஸம், சதமடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்த போது ஹாரிஸ் சோகைல் (68) 'ரன்-அவுட்' ஆனார். பெர்குசன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கேப்டன் சர்பராஸ் அகமது வெற்றியை உறுதி செய்தார்.


latest tamil news



பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் ஆஸம் (101), சர்பராஸ் அகமது (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூன்-201905:30:44 IST Report Abuse
Bhaskaran இந்தியாவுக்கு செக் வைக்க பாக்.கிற்கு விட்டுக் கொடுத்துள்ளார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X