அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'கொள்கையே இல்லாத கட்சிக்கு கொ.ப.செ., எதுக்கு?

சென்னை:'அ.ம.மு.க.,வை மக்கள் ரசிக்க வில்லை.தினகரனின் பண்பாடு மிகவும் மோசம்,'' என, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலரும், முன்னாள், எம்.எல்.ஏ.,வுமான தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.சென்னை, மதுரை விமான நிலையங்களில், நேற்று அவர் அளித்த பேட்டி:

கொள்கை,கட்சி,கொ.ப.செ., தினகரன், தங்கதமிழ்செல்வன்


அ.ம.மு.க., நிர்வாகம் சரியில்லை. அக் கட்சியை, மக்கள் ரசிக்கவில்லை. தினகரனின் பண்பாடு மிக மோசம். அவருக்கும், எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே, 18 எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னையில், கருத்து வேறுபாடு இருந்தது.


நல்ல பண்பாடு அல்ல


தேர்தலில் தோற்ற பின், அ.தி.மு.க., தன் பக்கம் இருக்கிறது என, தினகரன் கூறுகிறார். கொள்கையே இல்லாத கட்சிக்கு, கொள்கை பரப்பு செயலர் அவசியமா என்பது என் எண்ணம்.அவர்கள் தான், என்னை பற்றி தவறாக செய்திகள் பரப்புகின்றனர். மொபைல் போன் உரையாடலை பதிவு செய்வது, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்புவது, ஒரு தலைவருக்கான, நல்ல பண்பாடு அல்ல.பன்னீர்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோர், தினகரனை சந்தித்ததை, அவரே வெளியில் சொன்னது, கட்சி தலைவருக்கான பண்பாக இல்லை.


தலைவர்கள், ரகசியமாக சந்திப்பதை வெளியே சொன்னால், எப்படி நம்பகத்தன்மை வரும்? என்னை ஓரங்கட்ட காரணம் தெரியவில்லை. எம்.எல்.ஏ., பதவி போய், இரு ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கே, இந்த நிலைமை என்றால், அடிமட்ட தொண்டனுக்கு, என்ன நிலைமையாக இருக்கும்!தினகரன், தனியாக

முடிவெடுக்கிறார்.அ.ம.மு.க., துவக்கியதில், எனக்கு உடன்பாடு கிடையாது. 'அ.தி.மு.க.,வில் உள்ள, 90 சதவீத தொண்டர்கள், எங்கள் பக்கம் உள்ளனர்' என, தினகரன் கூறினார். ஆனால், ௧ சதவீதம் பேர் கூட வரவில்லை. தற்போது, நடப்பவை, சசிகலா ஒப்புதலுடன் நடக்கிறதா என்று தெரியவில்லை.


ஓய்வு தேவை
தற்போது அமைதியாக இருக்கிறேன். எந்த கட்சியில் சேருவது என்று, முடிவு எடுக்கவில்லை. உழைத்த உழைப்புக்கு, ஓய்வு தேவைப்படுகிறது. அ.தி.மு.க.,வில் இணைய சொல்லி, யாரும் என்னை அணுகவில்லை; அழைப்பு எதுவும் வரவில்லை. அமைச்சர்கள், வேலுமணி, தங்கமணி உடன் பேசுவ தாக தவறான செய்தியை பரப்புகின்றனர். அ.ம.மு.க., வில் உள்ளவர்கள் பாவம், அப்பாவிகள். அ.ம.மு.க.,வில், என்னை நீக்கனாலும் கவலை யில்லை. அரசியலில் இருந்து, விலக மாட்டேன். இவ்வாறு, அவர் கூறினார்.அ.தி.மு.க.,வில் சேர்க்க எதிர்ப்பு
'அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர், தங்க தமிழ்செல்வனை, கட்சியில் சேர்க்கக் கூடாது' என, அ.தி.மு.க.,வினர், 'போஸ்டர்' ஒட்டி, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரின் தோழி, சசிகலாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டவர், தங்க தமிழ்செல்வன். சசிகலாவுக்கு எதிராக, பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்திய போது, தங்க தமிழ்செல்வன், அவரை கடுமையாக விமர்சித்தார்.இருவரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே, அரசியல் பகை இருந்தது. பன்னீர்செல்வத்திற்கு, ஜெயலலிதா முக்கியத்துவம் அளித்ததால், தங்க தமிழ்செல்வன் அமைதியாக இருந்தார்.அவர் மறைவுக்கு பின், சசிகலா குடும்பத்துடன் இணைந்து, பன்னீரை கடுமையாக எதிர்த்தார். அ.தி.மு.க.,விலிருந்து தின கரன் ஓரம் கட்டப்பட்டபோது, அவருடன் சென்றார். அ.ம.மு.க.,வை ஆரம்பித்தபோது, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலராக நியமிக்கப்பட்டார்.

Advertisement

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தார்.


லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில், அ.ம.மு.க., படுதோல்வி அடைந்ததும், தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும், கருத்து வேறுபாடு வெடித்தது.


இந்நிலையில், தங்க தமிழ்செல்வன், அ.தி. மு.க.,விற்கு தாவ உள்ளதாகவும், அதற்காக அமைச்சர்கள் சிலருடன் பேசி வருவதாகவும், தகவல் வெளியானது. அவரை மீண்டும் கட்சி யில் சேர்க்க, முதல்வர், இ.பி.எஸ்., தரப்பு விரும்புகிறது. ஆனால், பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், சென்னையில், அ.தி.மு.க., வினர் சார்பில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.அதில், 'வன்மையாக கண்டிக்கி றோம்... கட்சிக்கு துரோகம் செய்த தங்க தமிழ் செல்வனை இணைக்காதே... ஜெ., ஆட்சியை கவிழ்க்க நினைத்த, துரோகி தங்க தமிழ் செல்வனை, கட்சியில் இணைக்காதே... ஜெ., ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது' என்ற வாச கங்கள், அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.


பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்,இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளதாக கூறப்படு கிறது. இது, இ.பி.எஸ்., தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஜூன்-201906:42:00 IST Report Abuse

meenakshisundaramஅப்போ கொள்கை (?) நிறைய கொண்ட திமுகவுக்கு நீ தான் கோ ப சே வா"? அமுக்கு கட்சி கூட உன்னை உதறிய இந்த நேரத்தில் ஸ்டாலின் உன்ன சேத்துக்கிட்டார்ன்னா அவரை என்ன சொல்றது?

Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
28-ஜூன்-201903:30:21 IST Report Abuse

 nicolethomsonசெம காமிடி , நல்ல பொழுதுபோக்கு

Rate this:
Jothi -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-201918:24:25 IST Report Abuse

JothiWaste of time and energy, speaking about this man and his party

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X