பொது செய்தி

இந்தியா

இரண்டுக்கு மேல் இருந்தால் பஞ்., தேர்தலில் நிற்க முடியாது

Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (9)
Advertisement
இரண்டுக்கு மேல் இருந்தால் பஞ்., தேர்தலில் நிற்க முடியாது

டேராடூன்: இரண்டு குழந்தைக்கு மேல் உள்ளவர்கள், பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற சட்ட திருத்த மசோதா, உத்தரகண்ட் சட்டசபையில், நேற்று நிறைவேறியது.

உத்தரகண்ட்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம், நேற்று நடைபெற்றது. இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, குரல் ஓட்டெடுப்பின் மூலம், இந்த மசோதா, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே, பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட தகுதி பெறுவர் என்ற சட்ட திருத்தமும், நிறைவேற்றப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆண்கள், எட்டாம் வகுப்பும், பெண்கள் ஐந்தாம் வகுப்பும் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற சட்ட திருத்தமும் கொண்டுவரப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Rengaraj - Madurai,இந்தியா
27-ஜூன்-201910:06:43 IST Report Abuse
P.Rengaraj அருமையான சட்டம். பஞ்சாயத்து தேர்தல் மட்டுமல்ல நாட்டின் எந்த ஒரு ஜனநாயக ரீதியான தேர்தலுக்கும் இது பொருந்த வேண்டும். அதாவது கூட்டுறவு,சங்க தேர்தல், தேர்தல் கமிஷன் நடத்தும் கட்சிகளின் உட்கட்சி தேர்தல்கள், தொழிற்சங்க தேர்தல்கள், அணைத்து உள்ளாட்சி தேர்தல்கள், சட்டசபை, ராஜ்யசபா, லோக்சபா தேர்தல்கள் எல்லாவற்றிக்கும் இது பொருந்த வேண்டும். தற்போது அரசு வேலையில் இருப்பவர்கள் கிரிமினல் குற்றம் புரிந்தால் அரசு வேலையில் நீடிக்க முடியாது. அதையே போன்று கிரிமினல் குற்றம் புரிந்தவர்கள் எந்தவொரு சிறிய தண்டனை பெற்று இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் நிற்க கூடாது, கிரிமினல் வழக்குகள் இருந்தால் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தாலும் செய்ய விட்டாலும் தேர்தலில் நிற்பதற்கு தடை என்று சட்ட விதிகள் கடுமையாக இருந்தால் பொது வாழ்வில் நல்லவர்களை நாம் தேர்ந்து எடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
27-ஜூன்-201910:04:46 IST Report Abuse
Maddy அருமை அருமை.... உயர் ஜாதியினர் 10 ஆம் வகுப்புவரை படிக்கவேண்டும் ஆனால் பழங்குடியினர் 5 ஆவது படித்தாலே தகுதிவந்துவிடும்.... என்ன ஒரு முற்போக்கு சிந்தனை... ஜாதியின் பின்னால் நின்று நாட்டை அழிக்கிறார்கள்... பஞ்சாயத்து தலைவருக்கும் அரசு தேர்வுகள் நடக்கப்படவேண்டும் அதிலே தலைவர்களை 2 வருடத்திற்கு ஒரு முறை இடமாற்றம் செய்யவேண்டும்... அப்போதுதான் ஊழல் ஒழிக்கமுடியும்...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-ஜூன்-201909:16:18 IST Report Abuse
ஆரூர் ரங் ராஜஸ்தானில் இதேபோன்ற சட்டத்தைக் கொண்டுவந்தபோது கோர்ட் தடுத்துவிட்டது .பின்னர் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் நீக்கிவிட்டது நினைவுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X