பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு 9வது இடமா? மத்திய அரசுக்கு கடிதம்

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (20)
Advertisement

சென்னை: சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களில், ஒன்பதாவது இடத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டது குறித்து, மத்திய அரசுக்கு, தலைமை செயலர், கடிதம் எழுதியுள்ளார்.


நாட்டில், சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலை, மத்திய அரசின், 'நிடி ஆயோக்' வெளியிட்டுள்ளது. இதில், கேரளா முதலிடம் பெற்றுள்ளது. ஆந்திராவுக்கு, இரண்டாம் இடமும், மஹாராஷ்டிராவுக்கு, மூன்றாம் இடமும் கிடைத்துள்ளது. 2018ல், இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம், ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தரவரிசை பட்டியலில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக, மத்திய அரசிற்கு, தமிழக தலைமை செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர், தனித்தனியாக, கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 99 சதவீத பிரசவங்கள், மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. ஆனால், நிடி ஆயோக் அளித்துள்ள விபரத்தில், 80 சதவீத பிரசவங்கள் மட்டுமே, மருத்துவமனைகளில் நடைபெறுவதாகவும், 20 சதவீத பிரசவங்கள், வீடுகளிலேயே நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி விவகாரத்திலும், முரண்பட்ட விபரங்கள் உள்ளன. இவற்றை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
27-ஜூன்-201914:25:22 IST Report Abuse
Shekar Raghavan நல்லதா போச்சு இதை வைத்து மத்திய அரசிடம் காசு வாங்கி கொள்ளை அடிக்கலாம், அடுத்த முறை இருபதாம் இடம் கிடைத்தால் கொள்ளையோ கொள்ளை வாங்க வாங்க
Rate this:
Share this comment
Cancel
27-ஜூன்-201912:54:06 IST Report Abuse
சவ்கிதார் நாய்க்குட்டி தமிழ்நாட்டில் தமிழ் பேசும் மருத்துவர் குறைந்து வருவது ஒரு காரணமாக இருக்கலாம் . காய்ச்சல் என்று போனால் வைத்து வலிக்கு மாத்திரை கொடுத்தால் என்ன செய்வது ஹிந்தி நகி மாலும் ஆவது கத்துக்கணும் போல இந்த ஹிந்தி காரைங்ககிட்ட இருந்து தப்பிக்க ..
Rate this:
Share this comment
வாடகைபாக்கி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
27-ஜூன்-201915:12:44 IST Report Abuse
வாடகைபாக்கி  சொடலைஆமாங்க, இந்த கட்சி காரங்க நடத்துற தனியார் மருத்துவகல்லூரிங்க இத்தனை வருஷமா கோடிக்கணக்கில் காசு வாங்கிட்டு ஹிந்திகாரங்களுக்கு மெடிக்கல் சீட்டு குடுத்துட்டு இருந்துருக்காங்க, அதன் விளைவு தான் தமிழ் பேச தெரியாத டாக்டருங்க.. இனிமே பாருங்க நீட் தேர்வு எழுதி நம்ம மாணவர்கள் இன்னும் அஞ்சு ஆறு வருஷத்திலே டாக்டரா வந்துருவாங்க, நீங்க சொல்லுற பிரச்னை தீர்ந்துடும்...
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
27-ஜூன்-201912:09:44 IST Report Abuse
Balaji பிரசவம் வீட்ல நடந்த தப்பான்னு தான் கேட்ருக்கேன். ஆஸ்பத்திரி போக வேண்டாம்னு சொல்லல. This can't be a measure to define advancement in medicare. மனுஷன் இயற்கையா செஞ்சிட்டிருந்த எல்லாத்தயும் செயற்கையா ஆக்கிட்டானுங்க including conceiving today through fertility centers. அநியாயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X