சபரிமலை விவகாரத்தால் தான் தோல்வி; ஒப்புக்கொண்டது மார்க்சிஸ்ட் கம்யூ.,

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (44)
Advertisement

திருவனந்தபுரம்: 'சபரிமலை விவகாரத்தால் தான், கேரள லோக்சபா தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படுதோல்வி அடைந்தது' என, அக்கட்சி கண்டறிந்துள்ளது.






நடந்து முடிந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, கேரளா மாநிலத்தின், மொத்தமுள்ள, 20 இடங்களில், ஒரு இடத்தில் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றது. 19 இடங்களில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றன. தேர்தல் தோல்வி குறித்து ஆராய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய கமிட்டியின், இரண்டு நாட்கள் ஆலோசனை கூட்டம், திருவனந்தபுரத்தில் நடந்தது.

அதில், தெரிவிக்கப்பட்டுள்ள முடிவுகளாவன: சபரிமலை விவகாரத்தில், நம் கட்சி எடுத்த முடிவு தான், தேர்தலில் தோல்வியை அளித்துள்ளது. குறிப்பாக, நம் கட்சி ஆதரவு பெண்களான, கனகதுர்கா மற்றும் பிந்து, சபரிமலைக்கு சென்றது தான், தோல்விக்கு முக்கிய காரணம். சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயது பெண்கள் செல்ல தடை இருந்த நிலையில், அதை தகர்த்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, முதலில் ஏற்ற, காங்., மற்றும் பா.ஜ., பின், நிலையை மாற்றிக் கொண்டன.





அவ்விரு கட்சிகளும், ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரம், தேர்தலில் எதிரொலித்துள்ளது. எனினும், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ.,வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றியாக கருதப்படுகிறது. நாம் மேற்கொண்ட பிரசாரம் தான், பா.ஜ.,வுக்கு தோல்வியை பெற்றுத் தந்துள்ளது. இவ்வாறு, அந்த கட்சி தெரிவித்துள்ளது. இதே கருத்தையே, மாநிலத்தை ஆளும், முதல்வர், பினராயி விஜயன், ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
27-ஜூன்-201920:07:25 IST Report Abuse
K. V. Ramani Rockfort கம்யூனிஸ்ட்கள் சபரிமலை விஷயத்தில் ஹிந்துக்களிடத்தில் கலகம் உண்டு பண்ண நினைத்ததின் விளைவுதான். கேரள ஹிந்துக்களிடம் இருந்த ஒற்றுமையை பாராட்டியே தீரவேண்டும் . அந்த ஒற்றுமையை ஏன் தமிழக மக்கள் காட்டவில்லை . திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எவ்வளுவு கேவலமாக பேசவேண்டுமோ பேசியபின்னரும் ஹிந்துக்கள் பலர் மன்றாடி கேட்டும் தமிழ் மக்கள் திமுக கூட்டணியை தேர்வு செய்தது மறக்கமுடியாத நிகழ்வு .
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
27-ஜூன்-201918:26:50 IST Report Abuse
karutthu இந்த ஜென்மங்கள் எப்போ காசு வாங்கி ஒட்டு போட ஆரம்பிச்சாங்களோ அப்போவே மக்கள் தோத்துப்போய்விட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
27-ஜூன்-201914:19:05 IST Report Abuse
narayanan iyer கேரள ஹிந்துக்களிடம் இருந்த ஒற்றுமையை பாராட்டியே தீரவேண்டும் . அந்த ஒற்றுமையை ஏன் தமிழக மக்கள் காட்டவில்லை . திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எவ்வளுவு கேவலமாக பேசவேண்டுமோ பேசியபின்னரும் ஹிந்துக்கள் பலர் மன்றாடி கேட்டும் தமிழ் மக்கள் திமுக கூட்டணியை தேர்வு செய்தது மறக்கமுடியாத நிகழ்வு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X