தண்ணீர் பிரச்னையை தீர்க்க 255 அதிகாரிகள் நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தண்ணீர் பிரச்னையை தீர்க்க 255 அதிகாரிகள் நியமனம்

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (10)
Share
தண்ணீர் பிரச்னை,  அதிகாரிகள், நியமனம்

புதுடில்லி: வறட்சி பாதித்த 255 மாவட்டங்களில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும் 255 அதிகாரிகள் தலைமையில் வல்லுனர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் 'ஜல சக்தி அபியான்' எனப்படும் நீர்வள பாதுகாப்பு அமைப்பின் கீழ் இந்த அதிகாரிகள் செயல்படுவர். இவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக ஜலசக்தி துறையின் செயலகத்திற்கு அறிக்கை அளிப்பர். மாவட்டங்களின் வறட்சியை போக்கவும் நீர் நிலைகளை பாதுகாக்கவும் நியமிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரிகளின் கீழ் நீர் வள வல்லுனர்கள் அந்தந்த பகுதி மத்திய மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் உட்பட பலர் செயல்படுவர்.இப்போது நியமிக்கப்பட்டுள்ள 255 அதிகாரிகள் மத்திய அமைச்சகங்களின் கூடுதல் செயலர் அல்லது இணை செயலர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள்.


latest tamil news
நாடு முழுவதும் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 255 மாவட்டங்கள் வறட்சி பாதித்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. அவை 1593 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 313 வட்டாரங்கள் கடும் வறட்சிக்கு உட்பட்டவையாக கண்டறியப்பட்டுள்ளன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X