மேட்டூர் அணைக்கு 9.19 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்குமா? | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு 9.19 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்குமா?

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (14)
Share
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடையாததால், இம்மாத இறுதிக்குள், மேட்டூர் அணைக்கு, 9.19 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடக அரசு வழங்குமா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின், மொத்த நீர்மட்டம், 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி.,யாகும்.உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, கர்நாடகா அரசு, ஜூனில், 9.19 டி.எம்.சி., ஜூலையில், 31.24 டி.எம்.சி., தண்ணீரை,
தண்ணீர்,கர்நாடகா, பருவ மழை, சந்தேகம்

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடையாததால், இம்மாத இறுதிக்குள், மேட்டூர் அணைக்கு, 9.19 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடக அரசு வழங்குமா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின், மொத்த நீர்மட்டம், 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி.,யாகும்.உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, கர்நாடகா அரசு, ஜூனில், 9.19 டி.எம்.சி., ஜூலையில், 31.24 டி.எம்.சி., தண்ணீரை, மேட்டூர் அணைக்கு வழங்க வேண்டும்.


தீவிரம் அடையவில்லை

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில், கடந்த ஆண்டு, தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால், ஜூனில், கபினி அணை நிரம்பியது. உபரி நீர், மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. அதற்கேற்ப, கடந்த ஆண்டு, ஜூன், 26ல், மேட்டூர் அணை நீர்மட்டம், 55.82 அடி; நீர் இருப்பு, 21.67 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 9,516 கன அடி நீர் வரத்து இருந்தது.நடப்பாண்டில், இதுவரை, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவ மழை தீவிரம் அடையவில்லை. நேற்று (26.06.2019) கபினிக்கு வினாடிக்கு 1,300 கன அடி; கே.ஆர்.எஸ்., அணைக்கு, 450 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. நேற்று (26.06.2019) 19.5 டி.எம்.சி., கொள்ளளவு உடைய கபினியில், 6.4 டி.எம்.சி., தண்ணீரும்; 49 டி.எம்.சி., கொள்ளளவு உடைய, கே.ஆர்.எஸ்., அணையில், 10.5 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே இருந்தன. கர்நாடகா அரசு, இம்மாத இறுதிக்குள், மேட்டூர் அணைக்கு, 9.19 டி.எம்.சி.,நீர் வழங்க வேண்டும். நேற்று (26.06.2019)வரை, 1.9 டி.எம்.சி., மட்டுமே, மேட்டூர் அணைக்கு வந்துள்ளது.


latest tamil news

கைவிரிப்பு

நேற்று முன்தினம்(25.06.2019), டில்லியில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது. இதில், உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த நீரை, தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட போதிலும், கர்நாடகா அணைகளின் நீர்வரத்து மற்றும் கையிருப்பு ஆகியவற்றை பொறுத்தே, நீர் திறக்க முடியும் என, ஆணையம் கைவிரித்து விட்டது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், நடப்பாண்டு, தென் மேற்கு பருவ மழை தாமதம் ஆவதால், இம்மாத இறுதிக்குள், கர்நாடகா, 9.19 டி.எம்.சி., தண்ணீரை, மேட்டூர் அணைக்கு விடுவிப்பதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது.


மேட்டூர் அணை


கடந்த மாதம், 26ல், 47.49 அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 44 அடியாகவும்; 16.26 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 14.24 டி.எம்.சி.,யாகவும் சரிந்தது. ஒரே மாதத்தில், அணை நீர்மட்டம், 3 அடி, நீர் இருப்பு, 2 டி.எம்.சி., சரிந்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென் மேற்கு பருவ மழை தாமதமாகும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம், மளமளவென சரிந்து வருவது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X