பொது செய்தி

இந்தியா

சாதனை இயக்குனர் விஜயநிர்மலா காலமானார்

Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (2)
Advertisement
நடிகை,விஜயநிர்மலா, VijayaNirmala

ஐதராபாத்: 250 படங்களுக்கு மேல் நடித்து 40 படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்து தென்னிந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த விஜயநிர்மலா இன்று (ஜூன் 27) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. இதனால் தெலுங்கு சினிமா உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இறுதி சடங்கில் பங்கேற்க வருகிறார். தெலுங்கு திரையுலக முன்னணியினர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


விஜய நிர்மலா வரலாறு:

விஜயநிர்மலாவின் பூர்வீகம் ஆந்திரா. தாய்மொழி தெலுங்கு என்றாலும், அவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். 7 வயது சிறுமியாக இருக்கும்போது, விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 15 வயதில் 'பார்கவி நிலையம்' என்ற மலையாளப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் வெளியான 'சவுகார்' என்ற படத்தை 'எங்கவீட்டுபெண்' என்ற பெயரில் தமிழில் தயாரித்த விஜயா புரொடக்ஷன் அந்தப் படத்தின் மூலம் விஜய நிர்மலாவை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்கள். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் தயாரான 'பணமா பாசமா' படத்தில், விஜயநிர்மலா நடித்தார். படம், சூப்பர்ஹிட்டாக அமைந்தது.
'எலந்தபழம்' பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலிக்க, விஜயநிர்மலா அந்த ஒரேபாடல் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு என் அண்ணன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கையாக நடித்தார். பிறகு சோப்பு சீப்பு கண்ணாடி' படத்தில் நாகேசுக்கு ஜோடியாக நடித்தார். அதில் எதற்கெடுத்தாலும் “அலேக்” என்று கூறுவார். அது பிரபலமாகி பின்னாளில் “அலேக்” நிர்மலா என்றே பிரபலமாக விளங்கினார் தமிழ்ப் படங்களில் நடித்து வந்தபோதே, தெலுங்குப் படங்களிலும் அவர் நடித்த படங்கள் அமோக வெற்றிபெற்றன. எனவே, தெலுங்குப் படங்களிலும் பிசியாக நடித்தார். தெலுங்கு படங்கள் தொடர்ந்து வெற்றி பெறவே அதன் பிறகு தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தினார். அப்போது முன்னணி நடிகராக இருந்த கிருஷ்ணாவுடன் இணைந்து 50 படங்களில் நடித்தார். மலையாளத்தில் பிரேம் நசீர் மற்றும் ஷீமா, தமிழில் சிவாஜி&பத்மினி போன்று தெலுங்கில் கிருஷ்ணா மற்றும் விஜயநிர்மலா ஜோடி பிரபலம். பின்னாளில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு கட்டத்தில் இயக்குனர் ஆனார். முதன்முதலாக இயக்கியது மலையாளப் படம்.'பெசோடா பெப்புலி' என்ற படத்தில் சிவாஜியையும் கணவர் கிருஷ்ணாவையும் கதாநாயகர்களாக நடிக்க வைத்து இயக்கியவர். மொத்தம் 42 படங்களை டைரக்ட் செய்தார். உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம்ஆகியமொழிகளில்மொத்தம் 275 படங்களில் நடித்துள்ளார். விஜய நிர்மலா மறைந்தாலும் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
metturaan - TEMA ,கானா
27-ஜூன்-201912:12:32 IST Report Abuse
metturaan ஒரு சரித்திரம் சாய்ந்துபோனது ..ஆழ்ந்த அனுதாபங்கள் ....
Rate this:
Share this comment
Cancel
27-ஜூன்-201910:59:35 IST Report Abuse
ஸாயிப்ரியா சாதனை பெண்ணாக திகழ்ந்த பெண் என்றாலும் எங்க வீட்டுப் பெண் என்பது போலவே இருப்பவர். இப்போது இல்லை என்பது வருத்தம் என்றாலும் நிஜமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X