பொது செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்டியதற்கு எதிர்ப்பு: மாலை அணிவித்து அஞ்சலி

Added : ஜூன் 27, 2019
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், வெட்டப்பட்ட மரத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தினர். குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம், வாரச் சந்தை பின்புறம் உள்ள பெரந்தார்காடு சாலையில் பெரிய வேப்ப மரம், பலருக்கும் நிழல் தரும் வகையில் இருந்தது. இதை, மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுநல ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் வெட்டப்பட்ட

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், வெட்டப்பட்ட மரத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தினர். குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம், வாரச் சந்தை பின்புறம் உள்ள பெரந்தார்காடு சாலையில் பெரிய வேப்ப மரம், பலருக்கும் நிழல் தரும் வகையில் இருந்தது. இதை, மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுநல ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் வெட்டப்பட்ட மரத்திற்கு மாலை அணிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தினர். பகுதியினர் கூறுகையில், 'மரங்களை வளருங்கள் என, பல பொதுநல அமைப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர். மரங்கள் இல்லாவிடில் மழை வளம் இல்லை என்பதை உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க முன் வர வேண்டும். இந்த மரத்தை வெட்டியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இதுகுறித்து, வி.ஏ.ஓ., ஜனார்த்தனன் கூறுகையில், ''யாரும் அனுமதியின்றி மரங்களை வெட்டக்கூடாது. மரம் வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X